"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Sunday, November 30, 2014
எடையைக் குறைக்க உதவும் வழிகள்
அ) காலை காபி / தேநீருக்குப் பதில் ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, அரை ஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிடுங்கள்.
ஆ) கொள்ளுத் துவையல், கொள்ளு ரசம், கொள்ளு சுண்டல் , கொள்ளுப் பொடி
கொள்ளு 100கி., துவரம் பருப்பு 50கி., மிளகாய் வற்றல் 6, கறிவேப்பிலை 1 கைப்பிடி, வெந்தயம் 10கி., பிளேக்ஸ் விதை 20கி., பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. வறுத்துப் பொடியாக்குவும்
Saturday, November 29, 2014
நம்முடைய உணவு
புளி:
குடம் (கோக்கம்) புளிதான் நம் நாட்டு புளி இனம். இப்போது பயன்படுத்தும் புளி நமது அல்ல. இந்தக் குடம் புளியை garcinia cambogia என்பார்கள் தாவரவியலாளர்கள். உலக சந்தையில் எடை குறைப்புக்காக பெரிதும் ஆய்வுசெய்யப்பட்ட பழம் இது. குடம் புளி உள்ளிருக்கும் சதைப்பற்றை மிக்ஸியில் நீர் சேர்த்து அடித்து, நிறைய நீர் சேர்த்து, கொஞ்சம் வெல்லத் தூள், ஏலக்காய் போட்டு கோடை காலத்தில் தாகத்துக்கு சாப்பிடலாம். இந்தக் குடம் புளி ஜூஸை சர்க்கரை சேர்த்த பழச்சாறாக்கி வணிகப்படுத்துகிறார்கள். ஆனால், வெள்ளை சர்க்கரை சேர்க்காமல், அவ்வப்போது இதைக் குடிப்பதே சிறப்பு!

Thursday, November 27, 2014
படித்ததில் பிடித்தது
“உத்தவரே ! அன்று குருக்ஷேத்திரப்போரில் அர்ஜூனனுக்காக நான் சொன்னது, ‘பகவத்கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள்,”உத்தவ கீதை”. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை தந்தேன். தயங்காமல் கேளுங்கள்” என்றான் பரந்தாமன்.
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
http://thangavelmanickadevar.blogspot.com/2014/11/blog-post_26.html
Tuesday, November 25, 2014
செயற்கை சர்க்கரை
அவதாரங்களின் பட்டியல் கொஞ்சம் பெரிது. Acesulfame, Aspartame, Neotame, Saccharin, Sucralose முதலிய செயற்கை இனிப்புகளும், Erythritol, Hydrogenated starch, Lactitol, Maltitol, Mannitol முதலான சர்க்கரை அமிலங்களும், Stevia, Tagatose, Trehaloseபோன்ற நவீன சர்க்கரைகளும் இதில் அடக்கம். இந்த வகையறாக்களில் முன்பே வந்த Aspartame எனும் ரசாயனத்தை காபியில் கலந்து குடிக்கலாம்;
Sunday, November 16, 2014
மருதாணியின் மருத்துவ பயன்
பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மருதாணி வைத்துக் கொள்ளாத பெண்களே கிடையாது. அதன் பூக்களை கூட பறித்து தலையில் வைத்துக் கொண்ட பெண்ணை கூட பார்த்திருக்கின்றோம். ஒரு கிருமி நாசினியாக, எதிர்ப்பு
நுண்ணுயிர் பண்புகளை கொண்ட ஒரு மூலிகையாக, தோல் காப்பானாக விளங்கும் மருதாணியை அரைத்து, கைகளில் வைத்துக் கொள்வது ஆடம்பரமற்ற அமைதியான அழகு தரக்கூடியது.முடிகருப்பாக வளரஇரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி., விட்டு,
மருதாணி இலைகளை போட்டு பொரித்து எடுக்கவும். இலையின்
சாறு சேர்ந்து சிவப்பாக மாறியிருக்கும் எண்ணெய்யில் வாசனைக்காக, 10 கிராம் சந்தனத் துாள் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரை மாறும்.
நரை மாறமருதாணி விழுது, எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய், நெல்லி முள்ளி துாள் இவற்றுடன் தயிர் கலந்து இரவு ஊற வைத்து, காலையில் அந்த கலவையை எடுத்து, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து, சிகைக்காய் போட்டு தலை முடியை அலசினால் நாள்பட்ட நரைக் கூட மாறும்.

Saturday, November 15, 2014
கொசுக்களை விரட்டும் இயற்கை வழிகள்
கொசுக்கள் மாயமாகும்!
நிழலில் காயவைக்கப்பட்ட நொச்சி, நிலவேம்பு, வேப்பிலை இலைகளை மஞ்சளுடன் சேர்த்து சாம்பிராணி புகை போடுவதைப் போல, வீடு முழுக்க பரப்ப, கொசுவின் உற்பத்தி குறைவதுடன், நம் சுவாசத்துக்கும் வலு சேர்க்கும்.
இயற்கை பூச்சிக் கொல்லியான பஞ்ச கவ்யத்தை (பால், தயிர், நெய், சாணம், கோமியம் சேர்ந்த கலவை) வீட்டைச் சுற்றி தெளித்தால் கொசுக்களின் எண்ணிக்கை குறையும்.
வேப்பிலை, நிலவேம்பு, மஞ்சள் ஆகியவற்றை நன்கு கொதிக்கவைத்து, வீட்டைத் துடைத்தும், வீட்டில் தெளித்தும் பயன்படுத்தினால், கொசுவின் இனப்பெருக்கம் குறையும்.
பேய் விரட்டிச் செடியின் வாசனைக்குக் கொசு நெருங்கவே நெருங்காது. அதனால், வீட்டிற்கு ஒரு நிலவேம்பு, நொச்சி, பேய்விரட்டி போன்ற செடிகளை வளர்க்கலாம்.
வீட்டைச் சுற்றி நீர் தேங்கியுள்ள இடங்களில் 30 மி.லி பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெயை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க, கொசுவின் லார்வாக்கள் இறந்துவிடும்.
நிலவேம்பு இலைகளை, மிளகு மற்றும் இஞ்சியுடன் சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். இதன் கசப்புத் தன்மையைக் குறைக்க, கொஞ்சம் தேன் சேர்த்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவரலாம்.
200 மி.லி தண்ணீரில் நிலவேம்புப் பொடி ஒரு டீஸ்பூன் கலந்து காய்ச்சவேண்டும். நீர் கொதித்து 50 மி.லியாக, வற்றியதும் வடிகட்டி மிதமான சூட்டில் பருக வேண்டும்.
கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்யலாம்.
பசுஞ் சாணம், நொச்சி, வேம்பு, பச்சை கற்பூரம் இவற்றை அரைத்து வரட்டியாகத் தட்டி உலர்த்தி, ஊதுவத்தி போல மாலை நேரங்களில் எரிய விடலாம்.
மாலைவேளையில் உலர் பசுஞ் சாணத்தில் நெய் விட்டு விளக்கு ஏற்றலாம். பசு சாணத்திலிருந்து வெளிப்படும் ஆக்சிஜன் வாயு உடலுக்கும் நல்லது.
வீட்டில் நொச்சி, வேப்பிலை, காட்டு துளசி, பேய் துளசி, அசோலா (கம்மல் பாசி), ரோஸ்மெரி, லெமன் க்ராஸ், கற்பூரவல்லி, கற்றாழை போன்ற மூலிகைச் செடிகளை வளர்த்து வருவதும் நல்லது. இதனால், கொசுக்கள் வீட்டுக்குள் வருவது குறையும்.
வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை தெளிக்கலாம்.
நொச்சி, பூண்டு, புதினா, கிராம்பு, துளசி, சாமந்தி போன்ற செடிகளும், வேம்பு, யூகலிப்டஸ் போன்ற மரங்களும் கொசுக்களை விரட்டும்
http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=104065
http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=104065
காட்டுத்துளசி
ஓமம் (Basil)
புதினா
மாரிகோல்டு
லாவெண்டர் (Lavender)
சிட்ரோசம்
கற்பூரவல்லி
ரோஸ்மேரி
செவ்வந்தி
வீனஸ் ஃப்லைட்ராப் (Venus Flytrap)
http://www.vikatan.com/news/health/82306-mosquito-repellent-plants-provide-extraordinary-benefits.html

நன்றி-டாக்டர் விகடன்
Sunday, November 9, 2014
கண் தானம்
‘இருக்கும் வரை ரத்த தானம்.இறந்த பின் கண் தானம்!’
என்று ஆட்டோக்களில் கூட எழுதி வைக்கிறோம்.கண் தானம் மற்றும் உடல் உறுப்புதானத்துக்கு பெயர் கொடுத்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்திற்குத்தான் முதல் இடம். ஆனாலும் தானம் கிடைப்பது மிகவும் குறைவுதான்.
உயிருடன் இருக்கும்போதே கண் வங்கியை அணுகி, தங்கள் கண்களை தானமாகத் தருவதற்கான, உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்திசெய்து தர வேண்டும். தன்னுடைய விருப்பத்தைப் பற்றி, குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் கண் வங்கிக்கு தகவல் கொடுக்க முடியும்.
ஒருவரின் உயிர் பிரிந்த ஆறு மணி நேரத்துக்குள், அவரது கண்களை எடுத்துவிட வேண்டும். இதற்கான வழிமுறைகள்:
அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்க வேண்டும். கருவிழிகளை மட்டும் எடுப்பது, முழு கண்களையும் எடுப்பது என கண் தானத்தில் இரண்டு வகைகள் உண்டு.
நன்றி-டாக்டர் விகடன்
Saturday, November 8, 2014
இணைய தமிழ் நூலகங்கள்
உலக மின்னியல் நூலகம்: http://catalog .crl.edu
தமிழ் மின்னியல் நூலகம்:
1) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்: http://www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html
2) மதுரைத் திட்டம்: http://www.projectmadurai.org
3) தமிழ் இணையக் கல்விக்கழகம்: http://www.tamilvu.org
4) தமிழ் மரபு அறக்கட்டளை: http://www.tamilheritage.org
5) நூலகம்.நெட்: www.noolaham.org
6) இந்திய மின்நூலகம்: www.dli.ernet.in
7) சென்னை நூலகம்: www.chennailibrary.com
8) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்: http://www.ulakaththamizh.org
தெற்காசிய மின்னியல் நூலகம் (www.dsal.uchicago.edu)என்ற பெயரில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு நூலகம் உள்ளது. மலாயா பல்கலைக்கழகமும் ஒரு மின்னியல் நூலகத்தை அமைத்துள்ளது.
நன்றி:
http://tamil.thehindu.com/general/education/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6558815.ece
Friday, November 7, 2014
கோயிலும் அறிவியலும்
உலகிலேயே மிக அமைதியான, நிம்மதியான இடம் எதுவென்று கேட்டால், அம்மாவின் மடி,
காதலியின் அருகாமை என்று, கவிஞர்கள் பாடலே இயற்றி விடுவர். ஆனால், உண்மையில் நிம்மதியான இடம், கோவில்கள் தான். ஒரு நிமிடம், ஆன்மிக கட்டுரையோ என்று கடந்து போய்விடாதீர்கள்!
நம் கோவில்கள் அமைந்திருக்கும் இடம், அமைப்பு, உள் கட்டமைப்பு, கதவுகள், கொடிமரம், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள்பிரகார பாதை என, ஒவ்வொன்றும் அறிவியல்,
மருத்துவம், விஞ்ஞானம் தொடர்புடையவை. பொதுவாக, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள், ஆழ்ந்த இடங்கள் தான், கோவில் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இங்கும் தான் காந்த அலைகள், நேர்மறையான எண்ண அலைகள், அதிகமாக பரவியிருக்கும்.
வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, மக்கள் பாதுகாப்பாக இருக்க, பிரமாண்டமான கோவில்கள் தான் பயன்பட்டன. பல நல்ல விஷயங்களை கற்பிக்கும் இடமாகவும் கோவில்கள் இருந்தன.மிக மிக அதிகமான காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளை பதித்து, அதன் மீது சிலையை அமைத்து, மூலஸ்தானம் உருவாகும்.
அதன்பின் தான் கோவில் கட்டப்படும். அந்த செப்பு தகடுகளின் தன்மை, பல நல்ல அலைகளை கிரகித்து, அதை பல மடங்காக, அந்த சிலை மூலம் வெளிக்கொணரும். எல்லா கோவில்களிலும், மூலஸ்தானம் மூன்று பக்கமும் மூடி, வாசல் மட்டும் திறந்திருக்கும் அளவிற்கு, கதவுகள் அமைந்திருக்கும். அந்த நேர்மறை அலைகள் ஒருமித்து கிடைக்க, இது வழிவகுக்கும்.
இதே போல், மூலஸ்தானத்தில், அணையாவிளக்கு ஒன்று எப்போதும் இருக்கும். அதைச் சுற்றி கண்ணாடியும் இருக்கும். அந்த எனர்ஜியை பரவ செய்யும், ஒரு நுட்பமான செயல் தான் கண்ணாடி வைத்திருப்பதன் நோக்கம் வேண்டுதலின் படி மாங்கல்யம், சாவி, பேனா, புதுநகைகள் போன்றவற்றை, இங்கு வைத்து எடுத்தால்,
இந்த உலோகங்கள் அங்குள்ள எனர்ஜியை, அப்படியே பற்றிக் கொள்ளும். அதனால்தான், கோவிலுக்கு தங்கத்தினால் ஆன நகைகளை அதிகம் அணிந்து போவது நல்லது எனக் கூறப்படுகிறது. இப்போது திருட்டு பயம் காணப்படுவதால், நகை அணிவதை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.கதவுகள் மரத்தினாலானதாக தான் இருக்கும். மரம் எல்லா உயர் அழுத்த மின்காந்த அலைகளையும், சமன் செய்து விடும் ஒரு சிறப்பு பொருள்.கொடி மரத்திற்கும், மூலஸ்தானத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. உச்சியில் இருக்கும் கலசம் இரிடியமாக மாறுவதும் அறிவியல் தான். கீழ் இருந்து கிளம்பும் மின்காந்த அலைகள் மற்றும் இடியின் தாக்கம் தான், சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றுகிறது.
சுற்று பிரகாரப் பாதை முழுவதும் கருங்கல் பதித்து தான், பண்டைய கோவில்கள் இருக்கும். வெறும் கால்களுடன் கருங்கல் மீது பதிய நடக்கும்போது, நம் கீழ் பாதத்திலுள்ள வர்ம
புள்ளிகளுக்கு அழுத்தம் கிடைக்கும். நம் அனைத்து உடல் உறுப்புகளுக்கும்,
நிவாரணம் தரக்கூடிய எல்லா புள்ளிகளுமே பாதத்தில் இருக்கிறது. அக்குபஞ்சர் டாக்டரிடம்
கேட்டால், இதனால் என்ன மாதிரியான நோய்கள் தடுக்கப்படுகின்றன என்று, ஒரு
பட்டியலே தருவார். இப்படி ஒவ்வொரு விஷயமாக, பார்த்து பார்த்து அமைந்திருக்கும் கோவிலுக்கு போவதையே, எள்ளி நகையாடும் பகுத்தறிவாளர்கள் இருக்கின்றனர்!
கருத்து தாக்கம் : http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22481&ncat=10&Print=1

Thursday, November 6, 2014
அரசியல் : கடல் வணிகம்
பெரியவர் வேலாயுதம் புட்டுப்புட்டுவைத்தார். “தம்பி, காலங்காலமா கடலுக்குப் போவணும்னா, கடலோடி மட்டும்தான் போவ முடியும்னு இருந்துச்சு. சுதந்திரத்துக்கு அப்புறம் மீன்பிடியை அதிகரிக்கணும்னுட்டு அரசாங்கம் நினச்சிது பாருங்க, விசைப்படகு, இழுவ மடின்னு அடுத்தடுத்து கொண்டாந்துட்டுச்சு பாருங்க, யாரு வேணா கடலுக்குப் போவலாம்னுட்டு ஆயிட்டு. இது என்னாயிட்டுன்னா, கடலுக்குள்ள முதலீட்டைக் கொண்டாந்துட்டு. ரெண்டு வர்க்கம் உருவாவுது. ஒண்ணு, பாரம்பரியக் கடலோடிங்க வர்க்கம்; இன்னொண்ணு, தொழில்மொற கடலோடிங்க வர்க்கம். மொத வர்க்கம், காலங்காலமா கடலை நம்பிப் பொழச்சது. ரெண்டாவது வர்க்கம், பண மூட்டையோட கடக்கரைக்கு வந்தது. இந்த ரெண்டாவது வர்க்கம் என்னா பண்ணுச்சுன்னா, காச வெச்சி அடிச்சு மொத வர்க்கத்துல தொழில் தெரிஞ்ச ஆளுங்களத் தன் கைக்குள்ள போட்டுக்கிட்டு. மொத வர்க்கம், தன்னோட அன்னாட பொழப்புக்குக் கடலுக்குப் போவுது. ரெண்டாவது வர்க்கம், தன்னோட மொதலீட்ட ரெண்ட நாலாக்கி, நால எட்டாக்கப் போவுது. பணம் மனுசனை வுடுமா? தொரத்துது. எட்ட பதினாறாக்கவும், பதினாற நூறாக்கவும் தொரத்துது. மனுசன் கடல அரிக்க ஆரம்பிச்சுட்டான்” என்கிற பெரியவர், கரையோரமாகப் போடப்பட்டிருக்கும் ஒரு வலையைக் கையில் எடுக்கிறார்.
http://writersamas.blogspot.in/2014/09/blog-post_5.html
Wednesday, November 5, 2014
Tuesday, November 4, 2014
மதிப்புரை.காம் தமிழ்ப் புத்தகங்களின் மதிப்புரைகளுக்காக இணையத்தளம்
இதனை ஏன் ஆரம்பித்தோம்?
(1) பொதுவாக தமிழ் தினசரி, வார, மாத இதழ்களில் வரும் புத்தக மதிப்புரைகள் மிகவும் குறைவு. சில இலக்கியச் சிற்றிதழ்கள் தங்களுக்கு விருப்பமான சிலர் எழுதும் புத்தகங்களைத் தவிரப் பிற புத்தகங்களை சீண்டக்கூட மாட்டார்கள். தினசரிகள் பத்து வரிகளுக்குமேல் புத்தக மதிப்புரைகள் எழுதுவதில்லை. இன்னும் பலர் வரப்பெற்றோம் என்று பட்டியல் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.
மேலும் படிக்க: http://www.badriseshadri.in/2014/11/blog-post_4.html
திருமண விருந்தில் உணவு உண்ணாதவரின் பாடல் (ஔவையார் )
ஔவையார் ஒரு சமயம் மதுரையிலே பாண்டியனுடைய அரண்மனைக்கு திருமணத்துக்கு போனார்.
அங்க இருக்குற காவல்காரர்கள் எல்லாம் விவேகம் இல்லாதவர்கள். ஔவையாரை, பழுத்த ஞானக் கிழவியை, உள்ளே அனுமதிக்கவில்லை.
அதை ஒட்டி வந்த பாடல்
பாடல் :
வண்டமிழைத் தேர்ந்த வழுதி கல்யாணத்து
உண்டபெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியினாலே
சுருக்குண்டேன் சோறுண்டிலேன்.
விளக்கம் :
வண் தமிழை கற்று தேர்ந்த வழுதி திருமணத்திற்கு சென்ற நான் அங்கே நிறைய உண்டேன் அதை சொல்கிறேன் கேள்:
அவனை நாடி உணவருந்தி வரலாம் என்று சென்ற நான் மக்களாலும், என்னை யார் என தெரியாத காவலர்களாலும் நெருக்கப்பட்டேன்(முன்டியடித்
கருத்து தாக்கம்:
http://gnanamethavam.blogspot.ie/2009/08/blog-post_30.html
http://thalirssb.blogspot.com/2014/11/sweet-tamil-part-3.html
Monday, November 3, 2014
Sunday, November 2, 2014
Saturday, November 1, 2014
பரிசுகள் மூலம் கிடைக்கும் வரிச் சலுகைகள்
1) கிஃப்ட் ரூ.50,000 வரை வரி கிடையாது
2) நெருங்கிய உறவினர்கள் தரும் ரொக்கம் அல்லது பொருள் பரிசுக்கு வரி கிடையாது
உதாரணம்: வீடு வாங்க, உங்களுடைய அப்பா/அம்மா/சகோதர/சகோதரிகள் உங்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சம் செலுத்தினால், அதற்கு வரி கிடையாது. ஆனால், பிற்காலத்தில் வீடு எப்படி வாங்கப்பட் டது என்ற கேள்வி எழும்போது அதற்கு உண்டான சரியான தஸ்தாவேஜுகளை (Documents) ஏற்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
உறவினரிடம் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் ரொக்கமாகவோ / பொருளாகவோ பரிசு வாங்கும்போது அதை உறுதிப்படுத்துகிற வாக்குமூலம் (Confirmatory Affidavit) பரிசு பெற்றவர் மற்றும் கொடுப்பவரின் கையொப்பத் துடன் இருப்பது நல்லது.
3) கல்யாண பரிசாக ரொக்கமோ / பொருளோ எவ்வளவு பெற்றாலும் வரி கிடையாது.
4) உறவினர் களிடமிருந்து மனை, வீடு போன்ற அசையாச் சொத்துகள் பரிசாக வந்தால் வரி கிடையாது. இதற்கு உச்சவரம்பு எதுவும் கிடையாது.
5) சொத்து உயில் மூலமும்/பரம்பரையாகவும் வந்தாலும் வரி கிடையாது.
தண்ணிரில் பல வகைகள்
தண்ணியில, எத்தனை வகை இருக்குனு கேட்டா... நல்ல நீர், உப்பு நீர்னு சொல்லுவோம். ஆனா, பல நூறு வருஷத்துக்கு முன்ன வாழ்ந்த தேரையர் சித்தர்... 18 வகை நீர் இருக்கிறதா சொல்லியிருக்கிறாரு. 1. மழைநீர், 2. ஆலங்கட்டிநீர், 3. பனிநீர், 4. ஆற்றுநீர், 5. குளத்துநீர், 6. ஏரிநீர், 7. சுனைநீர், 8. ஓடைநீர், 9. கிணற்றுநீர், 10. ஊற்றுநீர், 11. பாறைநீர், 12. அருவிநீர், 13. அடவிநீர், 14. வயல்நீர், 15. நண்டுக்குழிநீர், 16. உப்புநீர், 17. சமுத்திரநீர், 18. இளநீர்... இப்படியிருக்கிற இந்த நீர் ஒவ்வொண்ணுக்கும் வெவ்வேற மருத்துவத் தன்மைங்க இருக்குது.
எந்த மண்ணுல விளையுற காய்கறிகளை, எப்படி சாப்பிடணும்னு 'பதார்த்த குண சிந்தாமணி’ நூல்ல விளக்கமா எழுதி வெச்சிருக்காரு தேரையர் சித்தர். .
ஒவ்வொரு தண்ணிக்கும், ஒரு குணம் உண்டு. உதாரணத்துக்கு ஒரு விஷயத்தைச் சொல்றேன்... இன்னிக்கும்கூட குளூக்கோஸ் கிடைக்காத சமயத்துல, அவசர சிகிச்சைக்கு இளநீரை மனித உடம்புல ஏத்துற ஆங்கில மருத்துவருங்க உண்டு. ஆடு, மாடுகளுக்கு அவசர சிகிச்சை செய்யும்போதும், இளநீரை, குளூக்கோஸுக்கு பதிலா கொடுக்கிறாங்க. இந்த இளநீரை மரத்துல இருந்து கயிறு கட்டித்தான் இறக்கணும். ஏன்னா, இளநீர் 'பொத்’னு கீழ விழுந்தா கலங்கிடும். கலங்குன இளநீரை உடம்புக்குள்ள செலுத்தினா ரத்தக் குழாயில அடைச்சுடும். ஆக, ஒரு மருத்துவத்தை எப்படி செய்யணும்ங்கிற மருத்துவ அறிவு நம்மநாட்டு மக்களோட எந்த அளவுக்கு இருந்திருக்கும்ணு நினைச்சுப் பாருங்க!
இருபெரும் மனிதர்கள்
நீர்ப் பயணத்தில் சந்தித்த இரு ஆச்சரிய மனிதர்கள் இவர்கள். ஒருவர் தன்னுடைய இளவயதில் வெடி விபத்தில் - பார்வையை அல்ல; இரு கண்களையுமே - இழந்தவர். ஆனால், அவருடைய நம்பிக்கை அகக்கண்ணாக மாறி அவரை இயக்குகிறது. நம்மைப் போல நடக்கிறார், பஸ் ஏறுகிறார், கடல் தொழிலுக்குச் செல்கிறார், மீன் பிடிக்கிறார். இன்னொருவர் ஆக்ரோஷ அலைகளும் வாரிச் சுருட்டும் சுழல்களும் மிக்க குமரிக் கடலில் சிக்கிய 18 உயிர்களைத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியவர். யார் உதவிக்கு அழைத்தாலும் உடனே கடலில் குதிப்பவர். அவருடைய தர்மம் அவரை வழிநடத்துகிறது.
இயற்கை விவசாய பொருள்கள் வாங்கும் இடங்கள்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ‘ஆர்கானிக் பசுமையகம்’
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தபால் நிலையம் எதிரில், இயற்கை விவசாயிகள் இணைந்து, ‘தேன்கனி உழவர்கள் நேரடி விற்பனை சந்தை’யைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலைல 8 மணியில இருந்து 2 மணி வரைக்கும் சந்தை நடக்கும்
சென்னை மேடவாக்கம் பகுதியில் இயற்கை வேளாண்மையில் விளைந்த காய்கறி, கனி, தானியங்களை லிங்க பைரவி இயற்கை அங்காடியில் விற்பனை செய்துவருகிறார் தாமோதரன்.
http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article7952539.ece
பயோ பேசிக்ஸ் - கோவை
ஆர்கானிக் பார்மர்ஸ் அசோசியேஷன் - தர்மபுரி அருகே சிட்லிங்கியில்
http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7876531.ece
முழு இயற்கை வாழை, இப்போ, கத்திரி, கீரை, சௌசௌ, மிளகாய் எல்லாம் அறுவடையில இருக்கு
http://www.vikatan.com/pasumaivikatan/2016-jul-10/yield/120430-how-to-earn-25000-weekly-with-vegetables.art
தொடர்புக்கு, ஒருங்கிணைப்பாளர், மஞ்சுநாதன், சிட்லிங்கி பள்ளத்தாக்கு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சிட்லிங்கி அஞ்சல், அரூர் வட்டம்,
தருமபுரி மாவட்டம்-636906 செல்போன்: 98430 96854 அலுவலகம்: 89038 46499 மின்னஞ்சல்: svad.organic@gmail.com, இணையம்:www.svadorganic.com

Subscribe to:
Posts (Atom)