‘இருக்கும் வரை ரத்த தானம்.இறந்த பின் கண் தானம்!’
என்று ஆட்டோக்களில் கூட எழுதி வைக்கிறோம்.கண் தானம் மற்றும் உடல் உறுப்புதானத்துக்கு பெயர் கொடுத்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்திற்குத்தான் முதல் இடம். ஆனாலும் தானம் கிடைப்பது மிகவும் குறைவுதான்.
உயிருடன் இருக்கும்போதே கண் வங்கியை அணுகி, தங்கள் கண்களை தானமாகத் தருவதற்கான, உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்திசெய்து தர வேண்டும். தன்னுடைய விருப்பத்தைப் பற்றி, குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் கண் வங்கிக்கு தகவல் கொடுக்க முடியும்.
ஒருவரின் உயிர் பிரிந்த ஆறு மணி நேரத்துக்குள், அவரது கண்களை எடுத்துவிட வேண்டும். இதற்கான வழிமுறைகள்:
அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்க வேண்டும். கருவிழிகளை மட்டும் எடுப்பது, முழு கண்களையும் எடுப்பது என கண் தானத்தில் இரண்டு வகைகள் உண்டு.
நன்றி-டாக்டர் விகடன்
No comments:
Post a Comment