Friday, November 7, 2014

கோயிலும் அறிவியலும்

உலகிலேயே மிக அமைதியான, நிம்மதியான இடம் எதுவென்று கேட்டால், அம்மாவின் மடி, 
காதலியின் அருகாமை என்று, கவிஞர்கள் பாடலே இயற்றி விடுவர். ஆனால், உண்மையில் நிம்மதியான இடம், கோவில்கள் தான். ஒரு நிமிடம், ஆன்மிக கட்டுரையோ என்று கடந்து போய்விடாதீர்கள்!

நம் கோவில்கள் அமைந்திருக்கும் இடம், அமைப்பு, உள் கட்டமைப்பு, கதவுகள், கொடிமரம், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள்பிரகார பாதை என, ஒவ்வொன்றும் அறிவியல், 
மருத்துவம், விஞ்ஞானம் தொடர்புடையவை. பொதுவாக, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள், ஆழ்ந்த இடங்கள் தான், கோவில் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இங்கும் தான் காந்த அலைகள், நேர்மறையான எண்ண அலைகள், அதிகமாக பரவியிருக்கும்.
வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, மக்கள் பாதுகாப்பாக இருக்க, பிரமாண்டமான கோவில்கள் தான் பயன்பட்டன. பல நல்ல விஷயங்களை கற்பிக்கும் இடமாகவும் கோவில்கள் இருந்தன.மிக மிக அதிகமான காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளை பதித்து, அதன் மீது சிலையை அமைத்து, மூலஸ்தானம் உருவாகும். 

அதன்பின் தான் கோவில் கட்டப்படும். அந்த செப்பு தகடுகளின் தன்மை, பல நல்ல அலைகளை கிரகித்து, அதை பல மடங்காக, அந்த சிலை மூலம் வெளிக்கொணரும். எல்லா கோவில்களிலும், மூலஸ்தானம் மூன்று பக்கமும் மூடி, வாசல் மட்டும் திறந்திருக்கும் அளவிற்கு, கதவுகள் அமைந்திருக்கும். அந்த நேர்மறை அலைகள் ஒருமித்து கிடைக்க, இது வழிவகுக்கும்.
இதே போல், மூலஸ்தானத்தில், அணையாவிளக்கு ஒன்று எப்போதும் இருக்கும். அதைச் சுற்றி கண்ணாடியும் இருக்கும். அந்த எனர்ஜியை பரவ செய்யும், ஒரு நுட்பமான செயல் தான் கண்ணாடி வைத்திருப்பதன் நோக்கம் வேண்டுதலின் படி மாங்கல்யம், சாவி, பேனா, புதுநகைகள் போன்றவற்றை, இங்கு வைத்து எடுத்தால், 

இந்த உலோகங்கள் அங்குள்ள எனர்ஜியை, அப்படியே பற்றிக் கொள்ளும். அதனால்தான், கோவிலுக்கு தங்கத்தினால் ஆன நகைகளை அதிகம் அணிந்து போவது நல்லது எனக் கூறப்படுகிறது. இப்போது திருட்டு பயம் காணப்படுவதால், நகை அணிவதை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.கதவுகள் மரத்தினாலானதாக தான் இருக்கும். மரம் எல்லா உயர் அழுத்த மின்காந்த அலைகளையும், சமன் செய்து விடும் ஒரு சிறப்பு பொருள்.கொடி மரத்திற்கும், மூலஸ்தானத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. உச்சியில் இருக்கும் கலசம் இரிடியமாக மாறுவதும் அறிவியல் தான். கீழ் இருந்து கிளம்பும் மின்காந்த அலைகள் மற்றும் இடியின் தாக்கம் தான், சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றுகிறது.

சுற்று பிரகாரப் பாதை முழுவதும் கருங்கல் பதித்து தான், பண்டைய கோவில்கள் இருக்கும். வெறும் கால்களுடன் கருங்கல் மீது பதிய நடக்கும்போது, நம் கீழ் பாதத்திலுள்ள வர்ம 
புள்ளிகளுக்கு அழுத்தம் கிடைக்கும். நம் அனைத்து உடல் உறுப்புகளுக்கும், 
நிவாரணம் தரக்கூடிய எல்லா புள்ளிகளுமே பாதத்தில் இருக்கிறது. அக்குபஞ்சர் டாக்டரிடம் 
கேட்டால், இதனால் என்ன மாதிரியான நோய்கள் தடுக்கப்படுகின்றன என்று, ஒரு 
பட்டியலே தருவார். இப்படி ஒவ்வொரு விஷயமாக, பார்த்து பார்த்து அமைந்திருக்கும் கோவிலுக்கு போவதையே, எள்ளி நகையாடும் பகுத்தறிவாளர்கள் இருக்கின்றனர்!

கருத்து தாக்கம் :   http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22481&ncat=10&Print=1

No comments: