கருவுற்றிருந்த தாய் மகளிடம் கேட்டாள்
“கூறு மகளே!தம்பி வேண்டுமா,தங்கை வேண்டுமா?”
மகள் சொன்னாள் “தம்பியே வேண்டும்”
தயக்கமின்றிச் சொன்னாள் பெண்
“இராவணன் போல்” என்று
அதிர்ந்து போனாள் அன்னை
“என்ன உளறுகிறாய்,இராமன் என்பதற்கு
இராவணன் என்றாயோ?”
சிரித்தாள் மகள்.
”தங்கையின் அவமானம் தீர்க்க
தன் அரசையும் ஆயுளையும்
இழக்கத் துணிந்தவன்.
அன்னியன் மனைவியைக் கவர்ந்தாலும்
கை விரல் கூட வைக்காதவன்.
ஆனால் என்ன செய்தான் ராமன்
அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னான்
அன்பு மனைவி தன்னை.
எவனோ பழி சொல்லக்கேட்டு
கருவுற்ற மனைவியைக் காட்டுக்கு அனுப்பினான்
அம்மா!நீயும் ஒரு சகோதரி,ஒரு மனைவி
நீயே சொல்!இராவணன் போல் தம்பி வேண்டுவதில்
தவறெதேனும் உண்டோ?”
(கருத்து இணையத்திலிருந்து.கால மாற்றம் ;இளைஞர்களின் கருத்து மாற்றம்.பார்வை மாற்றம்,புரிதல் மாற்றம்!!)
நன்றி: http://chennaipithan.blogspot.com/