Monday, September 29, 2014

கவிதை


“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில்
வேலை செய்பவர் கேட்டார்!



“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி வெட்டும்
தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்!

“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

-வே. மதிமாறன்


நன்றி: http://www.malartharu.org/2014/09/e-v-r-periyar.html

No comments: