உணவு வகைகளில், 'டேஸ்ட்' சரியாக இல்லை என்றால், கொஞ்சம் உப்பைக் கொட்டி கலந்து விட்டு, 'இப்ப நல்ல டேஸ்டா இருக்கே...' என, சப்புக் கொட்டி சாப்பிடுவோர், நம்மில் ஏராளம். ஆனால், ஒரு நாளுக்கு, 5 கிராம் உப்பே பயன்படுத்த வேண்டும் என்பது யாருக்காவது தெரியுமா?
என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? அதுவே உண்மை!
உலக சுகாதார நிறுவனம், இப்படித் தான், ஒரு நபருக்கான உப்பின் பயன்பாட்டை அளவிட்டுள்ளது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், 'இருக்கிற வரைக்கும் நல்லா சாப்பிட்டு அனுபவிச்சுட்டு போகணும் பா...' என, வீண் ஜம்பம் பேசுவதே, பல நோய்களுக்கும் காரணமாகி விடுகிறது என்கின்றனர், டாக்டர்கள்.
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22031&ncat=11
No comments:
Post a Comment