தமிழர்கள் காலத்தினைப் பெரும்பொழுது, சிறுபொழுது என்று இருவகையாகப் பகுத்தனர். “பெரும்பொழுது“ என்பது, ஓர் ஆண்டின் ஆறு கூறுகள்.
கார் (மழை) – ஆவணியும் புரட்டாசியும்,
கூதிர் (குளிர்) – ஐப்பசியும் கார்த்திகையும்,
முன்பனி – மார்கழியும் தையும்,
பின்பனி – மாசியும் பங்குனியும்,
இளவேனில் – சித்திரையும் வைகாசியும்,
முதுவேனில் – ஆணியும் ஆடியும் என்பனவாகும்.
“சிறுபொழுது“ என்பது ஒரு நாளின் 24 மணி நேரத்தை ஆறு கூறுகளாக்குவது.
அதாவது ஒரு சிறுபொழுது என்பது நான்கு மணிநேரத்தை உள்ளடக்கியது.
நள்ளிரவு 2 மணிமுதல் காலை 6மணிவரை “வைகறை“, காலை 6 மணிமுதல் 10 மணிவரை “காலை“(விடியல்),
முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை “நண்பகல்“,
பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை “எற்பாடு“,
மாலை 6மணிமுதல் இரவு 10 மணிவரை “மாலை“,
இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 2மணிவரை “யாமம்“ என்பனவாகும்.
தமிழர்கள் சிறுபொழுதுகளை மணிக்கணக்கில் பிரிக்காமல் நாழிகைக் கணக்கில் பிரித்தனர்.
“நாழிகை“ என்பதுபழங்காலக் காலக்கணக்கீட்டின் ஓர் அலகு.
24நிமிடங்கள் ஒரு நாழிகை.
இந்த நாழிகையைக் கணக்கிட ஒரு கருவியினைக் கண்டறிந்தனர்.வட்டில் ஒன்றில் நீர் நிரப்பி, ஒரு சிறு துளை வழியே அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசியவிட்டு, எஞ்சிய நீரை அளந்து பொழுதினைக் கண்டறியும் விதத்தில் ஒரு கருவியினை உருவாக்கினர். அதனைக் கொண்டு பகலிலும் இரவிலும் துல்லியமாகக் காலத்தைக் கண்டறிய முடிந்தது. இக்கருவிக்குக் “குறுநீர்க்கன்னல்“ அல்லது “நாழிகை வட்டில்“ என்று பெயரிட்டனர்.இக்கருவி பற்றிய செய்தி மணிமேகலையிலும் இக்கருவியினைக் கொண்டு காலத்தினைக் கணக்கிட்ட நாழிகைக் கணக்கர் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்திலும் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க: http://www.tamilpaper.net/?p=9003
2 comments:
நல்ல பதிவு கலக்குங்க...
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ...
இப்போது
முகநூலிலும் ..
www.facebook/malartharu
Post a Comment