நாட்டுக்காய்கறிகள்
கத்திரி, முருங்கை, வெண்டை, பரங்கிக்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், கொத்தவரங்காய், அவரை, துவரை, முள்ளங்கி, பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய் எனக் கடைசியில் ‘காய்’ என முடியும் எல்லாமே நம் ஊர் பாரம்பரியக் காய்கறிகளே. மார்க்கெட் மதிப்புக் குறைவாக இருப்பதால், கொத்தவரங்காய், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவை அதிகம் பயிரிடப் படுவதில்லை.
நாட்டுப்பழங்கள் எவை?
கொய்யா, மாதுளை, சீதாப் பழம், தர்பூசணி, சப்போட்டா, எலுமிச்சை, எலந்தை, நாவல், மாம்பழம், பலாப்பழம், வாழை, அன்னாசி, பப்பாளி, திராட்சை, ஆரஞ்சு போன்றவை நம் ஊரில் விளையும் பழங்கள்.
மொந்தன் வாழைப்பழம் பார்க்க அழகாக இல்லை, தோற்றம் சரி இல்லை என்பதற்காகவே சரியாக விற்பனையாகாததால், இவை அதிகமாகப் பயிரிடப்படுவது இல்லை. இதில் உள்ள சத்துக்களோ ஏராளம். இது உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்துக்கு ஏற்றது.
முலம்:
http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=118118
"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Showing posts with label டாக்டர் விகடன். Show all posts
Showing posts with label டாக்டர் விகடன். Show all posts
Sunday, April 24, 2016
Monday, May 18, 2015
விட்டுத் தோட்டம்:
முலிகைச் செடிகள்:
வெந்தயக் கீரை
புதினா
துளசி / மின்ட் துளசி
மணத்தக்காளி
லெமன் கிராஸ்
கொத்தமல்லி
கற்றாழை
கற்பூரவல்லி
பிரண்டை
அருகம்புல்
தூதுவளை
வெற்றிலை
திருநீற்றுப்பச்சிலை
சிறியாநங்கை
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=105974
Friday, April 3, 2015
விஷமாகும் காய்கனிகள்
விஷத்தை முறிக்கலாம்!
'ஆபீஸ் போற அவசரத்துல கிடைக்குறதை சமைச்சு, சாப்பிடும் நடுத்தர மக்கள் என்ன செய்வது. உடலுக்குக் கெடுதினு தெரியுது. ஆனா, இயற்கை அங்காடிகளைத் தேடி போக முடியலையே'' என அலுத்துக் கொள்பவர்களுக்கும் ஒரு தீர்வைச் சொல்கிறது திருவனந்தபுரத்தில் உள்ள கேரள விவசாய பல்கலைக்கழகம். சிறிது புளியை எடுத்துக் கரைத்து, அந்த தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலந்துகொள்ளுங்கள். அந்தக் கலவையில் காய்கறி, பழங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால் காய்கறி, பழங்களில் உள்ள ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் 95 சதவிகிதம் நீங்கி விடும். பீன்ஸ், பாவக்காய் போன்ற காய்கறிகளை இரண்டு முறை கழுவ வேண்டும்.
மேலும் படிக்க:
Tuesday, March 10, 2015
பிளாஸ்டிகின் குறியீடுகள்
பிளாஸ்டிக் ரகசியம்
ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளிலும் உள்ள குறியீடுகள் அதன் பிளாஸ்டிக் தன்மையை விளக்குகிறது.
1 Polyethylene terephtalate (PETE or PET) - தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.
2 High density polyethylene (HDPE) - பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள்.
3 Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள்.
4 Low density polyethylene (LDPE) - மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்
5 Polypropylene - தயிர் கப், யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.
6 Polystyrene/Styrofoam - மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச்
7 எண் 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி இருப்பார்கள். சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில் போன்றவை இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக் கூடாது.
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=101262
Monday, March 9, 2015
மருத்துவப் பரிசோதனைகளின் போது, வெளிவரும் கதிரியக்கத்தின் அளவு
மருத்துவப் பரிசோதனைகளின் போது, வெளிவரும் கதிரியக்கத்தின் அளவு
நெஞ்சுப் பகுதி எக்ஸ் ரே - 0.1 mSv
நெஞ்சுப் பகுதி சி.டி. ஸ்கேன் - 7 mSv
வயிற்றுப் பகுதி சி.டி. ஸ்கேன் - 10 mSv
தலை சி.டி. ஸ்கேன் - 2 mSv
மூளை சி.டி. ஸ்கேன் - 2 mSv
இதயத்துக்கான சி.டி. ஸ்கேன் (கொரனரி ஆஞ்சியோகிராம்) - 12 mSv
(இது பெரியவர்களுக்கான அளவு. குழந்தைகளுக்கு இதில் ஐந்தில் ஒரு பங்கு அளவுதான் பயன்படுத்துவார்கள்).
மேமோகிராம் - 0.4 mSv
டெக்ஸா ஸ்கேன் - 0.001 mSv
அல்ட்ரா சவுண்டு ஸ்கேனிங்னில் கதிரியக்கம் இல்லை. இது மிகப் பாதுகாப்பானது. எம்.ஆர்.ஐ (Magnetic Resonance Imaging) ஸ்கேனிங்கிலும் கதிரியக்கம் இல்லை. இது காந்த அலைகளைக் கொண்டு செய்யப்படும் பரிசோதனை.

ஓர் ஆண்டுக்கு 50mSv வரை கதிரியக்கத்தை அனுமதிக்கலாம் என்றாலும்கூட, உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் எக்ஸ் ரே, சி.டி ஸ்கேன், மேமோகிராம் போன்றவற்றைச் செய்துகொள்ளவே கூடாது.
Tuesday, March 3, 2015
சர்க்கரை நோய் ஏன் ? எதற்கு ? எப்படி?
சர்க்கரை நோய் டைப் 1 மற்றும் டைப் 2 என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. தவிர, ப்ரீ டயாபடீஸ், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்ற வகைகளும் உண்டு.
டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் முற்றிலுமாக சுரப்பது இல்லை. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியது. இவர்கள் ஆயுள் முழுக்க இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
டைப் 2 சர்க்கரை நோய் என்பது மரபியல் மற்றும் வாழ்க்கைமுறை மாறுபாட்டால் ஏற்படக்கூடியது. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும். ஆனால் அதன் அளவு போதுமானதாக இருக்காது. சிலருக்கு இன்சுலின் தரம் போதுமானதாக இருக்காது. இதை
இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்' என்போம்.
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=100128
தடுக்கும் வழிகள்:
சர்க்கரையின் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளோர் (Impaired glucose tolerance stage), வெறும் வெந்தயத்தை லேசாக வறுத்துப் பொடித்துக்கொண்டு, காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டுவர, சர்க்கரை நோயைத் தாமதப்படுத்தும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.
Sunday, March 1, 2015
நச்சுக்களை நீக்கும் வழிகள்
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்திக்கு மருந்து சாப்பிடுதல், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து எடுத்துக்கொள்ளுதல், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மூக்கில் மருந்து விட்டு அழுக்கை அகற்றுதல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்களில் அஞ்சனமிடுதல் செய்ய வேண்டும் என்கிறது, நம்முடைய பாரம்பர்ய மருத்துவம். இப்படி செய்யும்போது, உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும், சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக வாழ உதவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
காலை 6-7 மணி அளவில் எலுமிச்சை டீ யுடன், இந்து உப்பு, மிளகு சேர்த்து மிடறு மிடறாக (Sip by sip) 15 நிமிடங்கள் வரை குடிக்க வேண்டும். காலை உணவாக, பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். மதியத்தில், கஞ்சி, காய்கறி உப்புமா போன்ற லைட்டான உணவுகளை சாப்பிடலாம். இரவில் பழங்களை (2 வாழை)சாப்பிடலாம். மறுநாள் காலை 7 மணி அளவில் நெல்லிச் சாற்றைக் குடித்து, விரதத்தை முடிக்கலாம்.
http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=103710

சமையல் குறிப்புகள்
குதிரைவாலி பொங்கல்
தேவையானவை: குதிரைவாலி அரிசி - அரை கப், பாசிப் பருப்பு - கால் கப், மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காயம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பருப்பு, குதிரைவாலி அரிசி இரண்டையும் கழுவி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் வேகவைக்கவும். பிறகு, கடாயில் எண்ணெய், நெய்யைக் காயவிட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து (அடுப்பை `சிம்'மில்வைத்துத் தாளிக்கவும்) அரிசி, பருப்பில் கொட்டி, உப்பு போட்டுக் கிளறிவிட்டு, குக்கரை மூடி வைத்து வெயிட் போட்டு, இரண்டு விசில் வந்தபிறகு, `சிம்'மில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கவேண்டும்.
வரகு அரிசி தயிர்சாதம்
தேவையானவை: வரகு அரிசி ஒரு கப், கொழுப்பு நீக்கிய பால் (ஸ்கிம்டு மில்க்) ஒரு கப், தயிர் (கொழுப்பு நீக்கிய பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது) ஒரு கப், மாங்காய் இஞ்சி விரல் நீளத் துண்டு, பச்சை மிளகாய் 2, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு ருசிகேற்ப. தாளிக்க: எண்ணெய், கடுகு, பெருங்காயம் தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: வரகு அரிசியை இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து நன்கு குழைய வேகவிட்டு எடுக்கவும். பாலைக் காய்ச்சி அதில் ஊற்றி, ஆறவிடவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி, அதையும் கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டுக் கிளறி, வரகு அரிசி சாதத்தில் கொட்டிக் கிளறவும். நன்கு ஆறிய பிறகு, தயிர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து சாப்பிடலாம்.
குறிப்பு: புளித்த தயிர் என்றால், தயிர் சாதத்தைத் தயாரித்த உடனேயே சாப்பிடலாம். புளிக்காத தயிர் எனில், சிறிது நேரம் வைத்திருந்து சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும்.
கொள்ளு அடை
தேவையானவை: முளைக்கவைத்த கொள்ளு அரை கப், குதிரைவாலி அரிசி (அல்லது) தினை, மைசூர் பருப்பு, கடலைப் பருப்பு, முழு உளுந்து தலா கால் கப், வரமிளகாய் 3 அல்லது 4, இஞ்சித் துருவல் அரை டீஸ்பூன், கறுப்பு எள் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: கொள்ளுவைத் தனியாகவும், குதிரைவாலி அரிசி, மைசூர் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து ஆகியவற்றைத் தனியாகவும் தண்ணீரில் ஊறவைக்கவும். வெறும் வாணலியில் எள்ளை லேசாக வறுத்தெடுக்கவும். உப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் இரண்டு சுற்றுச் சுற்றி எடுக்கவும். அத்துடன் முதலில் கொள்ளு சேர்த்து இரண்டு சுற்றுக்கள் அரைத்து, பிறகு மீதி உள்ள ஊறவைத்த பருப்பு வகைகளைச் சேர்த்து, இஞ்சி, எள் சேர்த்து கரகரவென அரைத்தெடுக்கவும். அடை மாவில் கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கலந்து, தவாவில் லேசாக எண்ணெய் தடவி, வார்த்தெடுக்கவும். மூடி போட்டு வேகவிடவும். பிறகு, திருப்பிப் போட்டு எடுக்கவும்.
குறிப்பு: கொள்ளு, புரதம் மற்றும் ஆக்ஸிகரணிகளைக் கொண்டுள்ளது. மேலும் மெதுவான ஜீரணத்தால், அதிக சர்க்கரையின் அளவை (Post prandial Hyperglycemia) அளவைக் குறைத்துவிடும் தன்மையைக் கொண்டுள்ளது. குதிரைவாலியும் புரதம் மற்றும் நார்ச்சத்தைக் கொண்டுள்ளதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். பருப்பு வகைகளில் அதிகப் புரதம் உள்ளது.
தினை அரிசி துவையல்
தேவையானவை: தினை அரிசி - கால் கப், உளுத்தம்பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க) - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில், தினை அரிசியை பொரியும் வரை வறுக்கவும். அதே வாணலியில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை சிவக்க வறுக்கவும். பிறகு பெருங்காயத்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து ஆறவிடவும். வறுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து புளி, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நைஸாகவும் இல்லாமல், கொரகொரப்பாகவும் இல்லாமல் அரைக்கவும். மிக்ஸி ஜாரை கழுவி, அந்த தண்ணீரையும் அரைத்த கலவையில் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து பொரிய விட்டு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத்தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து வதக்கவும். கரைத்த கலவையை தாளித்தவற்றில் ஊற்றி கொதிக்கவிடவும். கலவை சற்று கெட்டியானதும் இறக்கவும். சாதத்தில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடவும். இட்லி, தோசை, சப்பாத்திக்கும் ஏற்ற சைட் டிஷ் இது.
நினைவுத்திறனுக்கு வல்லாரை சூப்
தேவையானவை: வெங்காயம் – 2, மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், பூண்டுப்பல் – 10, பச்சைமிளகாய் -2, தக்காளி – 3, வல்லாரைக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - சிறிது, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியைப் பச்சையாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு கொதிவந்ததும், நறுக்கிய வல்லாரைக் கீரையைச் சேர்க்க வேண்டும். கீரை பாதி அளவுக்கு வெந்ததும், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். கீரையை நீண்ட நேரம் வேகவைக்கக் கூடாது.
பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதயத்துக்கு நல்லது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சோர்வை நீக்கும். பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும்.

Subscribe to:
Posts (Atom)