போதிய விவசாய வருமானம் இல்லாத காரணத்தால், திருத்தணியில் இருந்து சென்னைக்கு இடம்பெயரும் மக்கள் அதிகம். ஆனால், நகரத்தில் அவர்களால் நன்றாக வாழவும் முடிவதில்லை; குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தரவும் முடிவதில்லை. இந்த நிலையை மாற்றி, பிள்ளைகள் பற்றிய அவர்களது கவலையைப் போக்க, சில ஆண்டுகளாக நடந்துவந்த பள்ளி ஒன்றை வாங்கியது தனிரசா. வழக்கமான மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் உள்ளதுபோல, நன்கு படித்த ஆசிரியர்களைக்கொண்டு தரமான கல்வி, யூனிஃபார்ம் முதல் அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது. சனிக்கிழமைதோறும் ஊக்கமூட்டும் பேச்சாளர்கள், குழந்தைகளிடம் உரையாடுகிறார்கள்.
http://www.vikatan.com/avalvikatan/2017-jul-11/inspiring-stories/132289-women-always-have-multitasking-brain.html