Showing posts with label அவள் விகடன். Show all posts
Showing posts with label அவள் விகடன். Show all posts

Thursday, September 8, 2016

ஊரும் பொருளும்

குமாரபாளையம் லுங்கி 120 ரூபாய்.

நெய்க்காரப்பட்டி (திண்டுக்கல்) வெல்லம் ஒரு கிலோ ரூபாய் 25

கும்பகோணம் (தஞ்சாவூர்) வெற்றிலை.ஒரு கவுளி ரூபாய் 60

நத்தம் ரெடிமேட் சட்டைகள் நத்தம் சென்ட்ரல் சினிமா வீதி (திண்டுக்கல்) சட்டை 

சீர்காழி (நாகப்பட்டினம்)  பிரம்பு ஊஞ்சல், சோபா

கரூர் (கரூர் பஸ் நிலையத்துக்குப் பின்புறமுள்ள 80 அடி சாலை) வீட்டு உபயோக துணி வகைகள்

பத்தமடை  (திருநெல்வேலி)  பாய் 150 

திண்டுக்கல் பூட்டு 

சென்னிமலை (ஈரோடு) போர்வை 

மார்த்தாண்டம் (கன்னியாகுமரி) தேன் 100 - 150 ரூபாய்

 கடலூர் மாவட்டத்தில் நொச்சிக்காடு, சித்திரைப்பேட்டை, நடுத்திட்டு, தியாகவல்லி என இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் பயிர் செய்யப்படுகிறது. 

http://www.vikatan.com/avalvikatan/2016-sep-20/lifestyle/123125-places-and-their-famous-products-in-tamil-nadu.art

http://www.vikatan.com/pasumaivikatan/2016-nov-10/yield/124856-herbal-plants-in-lucknow.art

Sunday, February 14, 2016

முட்டையின் நன்மைகள்


தரமான, புதிதான முட்டையாகச் சாப்பிட வேண்டியது அவசியம். நல்ல ஃப்ரெஷ்ஷான முட்டையை இப்படிக் கண்டறியலாம்






முலம்:

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=115569&sid=3527&mid=3

Friday, May 22, 2015

கியாஸ் காப்பீடு



தனிநபருக்கான விபத்துக் காப்பீடு 5 லட்சம் வரை, மருத்துவச் செலவுகள் 15 லட்சம் வரை, உடைமைச் சேதாரம் 1 லட்சம் வரை உண்டு. எல்லா வகையிலும் சேர்த்து தனிநபருக்கு 10 லட்சம் வரை வழங்கப்படும்.


விபத்திற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் ஐ.எஸ்.ஐ தரச்சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும்.


http://www.vikatan.com/article.php?module=magazine&aid=106517&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=1

http://archives.deccanchronicle.com/130831/news-current-affairs/article/no-claims-lpg-insurance?page=show

http://www.hindustanpetroleum.com/documents/pdf/INSURANCE%20POLICY.pdf


Sunday, December 14, 2014

அவள் விகடன்: விஷக்கடிக்கான மருத்துவ முறைகள்


கிராமம், நகரம் வித்தியாசமில்லாமல் சில ஜவராசிகள் மனிதர்களுடன் இரண்டற கலந்து வாழ்ந்து வருகின்றன. அழையா விருந்தாளிகளாக வந்து நம் இல்லத்திலேயே தங்கிவிடும். அவை, அவ்வப்போது கொடுக்கும் சிறுதொல்லைகளை சமாளிக்கும் எளிய வழிமுறைகள் இதோ…
பல்லி!
பல்லி கடிப்பது அரிதான ஒன்று. அப்படி கடித்தால், அவுரி இலை மற்றும் அதன் வேர் ஆகியவற்றை 50 கிராம் எடுத்து, 500 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லி அளவுக்கு சுண்டும் வரை காய்ச்சி, தினமும் 25 மில்லி வீதம் நான்கு நாட்கள் குடித்து வந்தால் விஷம் குறையும்.
பூச்சிக் கடி!
சில நேரங்களில் பெயர் தெரியாத பூச்சிகள் கடித்துவிடும். எந்த பூச்சி கடித்தாலும், வெதுவெதுப்பான நீரில், மக்காச்சோளமாவு, சமையல் சோடா இரண்டையும் சேர்த்துக் கலந்து, பூச்சிக் கடித்த இடத்தில் தடவினால்… விஷம் இறங்கும்.
அரணைக் கடி!
அரணை கடிப்பதைவிட நக்கிச் சென்றுவிடும். இதுவே விஷம் என்பார்கள். இதற்கு சீமை அகத்தி இலையை விழுதாக அரைத்து, தேங்காய் எண்ணெயில் குழைத்து கடிவாயில் பூசி வந்தால் விஷம் குறையும்.
தேனீ, குளவி!
தேனீ, குளவி கொட்டினால் மாங்காய் காம்பில் இருந்து வழியும் பாலை கடிவாயில் தடவினால் விஷம் இறங்கும். அல்லது கடிவாயில் சுண்ணாம்பு தடவினால் வீக்கம் குறைந்து விஷமும் இறங்கும்.
தேள் கடி!
20 மிளகுடன், தேங்காய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று தின்றுவந்தால் தேள்கடி விஷம் குறையும். அல்லது வெள்ளைப் பூண்டை அரைத்து கடிவாயில் தடவினால் விஷம் குறையும். புளியைக் கரைத்து சிறிது குடித்துவிட்டு, தேள் கொட்டிய இடத்தில் தடவினால் விஷம் இறங்கும். தேன், எலுமிச்சைச் சாறு இரண்டையும் குழைத்து கடிவாயில் தடவினாலும் விஷம் இறங்கும்.
கம்பளிப்பூச்சி!
கம்பளிப்பூச்சியின் ரோமம் உடலில் பட்ட இடத்தில் நல்லெண்ணெய் தடவினால் வீக்கம், அரிப்பு நீங்கும். அல்லது முருங்கை இலையை அரைத்து பற்று போட்டாலும் அரிப்பு குறையும். வெற்றிலையை சாறு வரும் அளவுக்கு அழுத்தி தேய்த்தாலும் அரிப்பு குறையும்.
பூரான்!
வெற்றிலைச் சாற்றில் மிளகை நான்கு மணி நேரம் ஊறவைத்து, அதை எடுத்து காயவைத்து சாப்பிட்டு வந்தால், பூரான் கடி விஷம் குறையும். துளசி இலைகளைக் காயவைத்து பொடி செய்து, 5 மிளகு சேர்த்து மென்று தின்றால் பூரான் விஷம் குறையும்.
விஷக்கடி வலி நீங்க!
கரிசலாங்கண்ணி இலையை ஆட்டுப்பாலில் அரைத்து கொடுத்தால், விஷக்கடியால் ஏற்படும் வலி குறையும்.
மேற்சொன்ன எந்த ஜந்து கடித்தாலும் நாட்டுத் தக்காளி, மணத்தக்காளி செடிகளின் இலைகளையும் இடித்து சாறு பிழிந்து, அதில் 200 மில்லி தினமும் குடித்து வந்தால் விஷம் குறையும். விஷ ஜந்துக்கள் எது கடித்தாலும், உடனடியாக கடிவாயில் சுண்ணாம்பைத் தடவி, எட்டு மிளகை வாயில் போட்டு மென்று விழுங்குவது முதல் உதவியாக இருக்கும்.
நாய், பூனை, பாம்பு!
நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகள் கடித்தால், உடனடியாக வெங்காயம், உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து கடிபட்ட இடத்தில் தடவினால் விஷம் குறையும். எலி கடிக்கும் இதே வைத்தியம் பலன் கொடுக்கும். இந்த முதல் உதவியைச் செய்தபிறகு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுப்பது நல்லது. சாதாரண பாம்புகள் கடித்தால், சுண்ணாம்பை தடவி, எட்டு மிளகை வாயில் போட்டு மென்று விழுங்குவதே போதுமானதாக இருக்கும். விஷப்பாம்புகள் என்றால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.

Saturday, December 6, 2014

பெண்களுக்கான ஆப்

ஆல் இன் ஒன் வுமன் ஸ்டோர்!
‘வுமன் ஸ்டோர்’ எனும் ஆப்ஸ் பெண்களுக்குத் தேவையான அனைத்து ஷாப்பிங் இணையதளங்களையும் இணைத்து ஒரு ஆப்ஸை உருவாக்கியுள்ளது. அது மட்டுமின்றி குழந்தை பாதுகாப்பு, உணவு, பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு போன்றவற்றுக்கு பயன்படும் அனைத்து வசதிகளையும் இந்த ஆப்ஸில் வழங்கியுள்ளது. பெண்கள் தினம், அன்னை யர் தினம் போன்ற சிறப்பு தினங்களுக்கு ஆஃபர்களையும் வழங்குகிறது இந்த ஆப்ஸ். கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸை பின்வரும் இணையதள முகவரியில் டவுன்லோடு செய்யலாம்… https://play.google.com/store/apps/details?id=com.wTheWomensStore&hl=en