Sunday, July 30, 2017

Yazh Movie - Sivayanama Song - "யாழ்" - சிவயநம பாடல் -






சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...
வாள் கொண்டு சாயாத
தலையெங்கள் தலையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.....
வேல் கண்டு சாயாத
படையெங்கள் படையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.....
குளப்பு வழி அன்ன 
கவடுபடு பத்தல்
விளக்கு அழல் உருவின் 
விசிஉறு பச்சை
எய்யா இளஞ்சூற் 
செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளைவாழ் அலவன் கண் கண்டு
அளைவாழ் அலவன் கண் கண்டு"
மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்..
யாழ் கண்டு நாமிங்கு
நாள் கண்டு
கோள் கண்டு
வாழ்கின்ற வழி சொன்னோம் சிவசங்கரா..
உள் கண்டு வெளிகண்டு
உள்ளுக்கும்
உள்கண்டு
உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா..
மகரபேரி கீசகுசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்
"துளைவாய் தூர்ந்த
துரப்பு அமை ஆணி
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண் நா இல்லா அமைவரு வறுவாய்
பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின்
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின்
ஆய்திணை யரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்"
மேல் அந்து போனாலும்
தோல் வெந்து போனாலும்
சூல் கொண்டு வருவோமே சிவசங்கரா..
நாள் வந்த பின்னந்த
நாள் வந்த பின்னெங்கள்
யாழ் கொண்டு வருவோமே சிவசங்கரா..
"கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;
மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன,
அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி;
ஆறு அலை கள்வர் படை விட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை"
மகரபேரி கீசகசீறி சகுடசெங்கோட்டி வில் வகை இதாழ்
தீ என்று சொன்னாலும்
தீபங்கள் என்றாலும்
தீ என்பதொன்றுதான் சிவசங்கரா..
நீ என்று சொன்னாலும்
நான் என்று சொன்னாலும்
நம் சக்தி ஒன்றுதான் சிவசங்கரா..
சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

வரிகள் - மணி அமுதவன்
படம்- யாழ்
இசை - அருநகிரி

Saturday, July 1, 2017

Special school சிறப்பு பள்ளி


டிஸ்லெக்ஸியா மட்டுமல்லாமல், ஆட்டிசம், ஹைப்பர் ஆக்டிவ்னு குறைபாடுகள் எதுவாக இருந்தாலும் அந்தக் குழந்தைகளுக்கான சிறந்த பள்ளியாக இது இருக்கணுங்கிற இலக்குடன் தொடங்கினோம்.

http://www.vikatan.com/avalvikatan/2017-jun-13/inspiring-stories/131513-ekadaksha-learning-center.html

Tamil School தமிழ் பள்ளிகள்

போதிய விவசாய வருமானம் இல்லாத காரணத்தால், திருத்தணியில் இருந்து சென்னைக்கு இடம்பெயரும் மக்கள் அதிகம். ஆனால், நகரத்தில் அவர்களால் நன்றாக வாழவும் முடிவதில்லை; குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தரவும் முடிவதில்லை. இந்த நிலையை மாற்றி, பிள்ளைகள் பற்றிய அவர்களது கவலையைப் போக்க, சில ஆண்டுகளாக நடந்துவந்த பள்ளி ஒன்றை வாங்கியது தனிரசா. வழக்கமான மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் உள்ளதுபோல, நன்கு படித்த ஆசிரியர்களைக்கொண்டு தரமான கல்வி, யூனிஃபார்ம் முதல் அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது. சனிக்கிழமைதோறும் ஊக்கமூட்டும் பேச்சாளர்கள், குழந்தைகளிடம் உரையாடுகிறார்கள்.


http://www.vikatan.com/avalvikatan/2017-jul-11/inspiring-stories/132289-women-always-have-multitasking-brain.html