Monday, June 27, 2016

புறநானூறு - 123. மயக்கமும் இயற்கையும்!

புறநானூறு - 123. மயக்கமும் இயற்கையும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 


நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்

பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.

பொருளுரை:

பகல் பொழுதில் கள்ளுண்டு அரசவையில் 
மகிழ்ச்சியோடு இருக்கும் பொழுது தேர்களைப் 
பரிசாக அளிப்பது யாவர்க்கும் எளிது. 

ஆனால், குறையாத புகழுடன் விளங்கும் 
மலையமான் திருமுடிக்காரி அவ்வாறு கள்ளுண்டு 
மகிழாது தெளிவாக இருக்கும்பொழுது அளித்த 
வேலைப்பாடுகள் நிறைந்த நெடிய தேர்கள் 
பயனுள்ள முள்ளூர் மலைமேல் விழுந்த 
மழைத்துளிகளைவிட அதிகம்.


Description: (A song About Malaiyamaan Thirumudikkaari)

It is easy for any one to give chariots 
as gifts to others when sitting happily 
in the court yard with drunkenness. 

But Thirumudikkaari , who has imperishable fame will give  
decorated chariots to other  
even if he is not in a drunkenness state. 

The chariots given by him are 
more than the rain drops 
which rain on the Mulloor hill. 
-Kapilar


முலம்:
http://puram400.blogspot.in/2009/11/123.html


No comments: