பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்துஅடிக் காரிநின் நாடே
அழல்புறம் தரூஉம் அந்தணர் அதுவே;
வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவருள் ஒருவன் துப்பாகியர் என
ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே;
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோள்அளவு அல்லதை
நினதுஎன இலைநீ பெருமிதத் தையே
பொருளுரை:
வீரக்கழல் அணிந்த சிறந்த திருவடிகளுடைய திருமுடிக்காரி!
உன் நாடு கடலால் கொள்ளப்படாதது;
அதை கொள்ளுதற்குப் பகைவரும் முயற்சி செய்ய மாட்டார்கள்.
அது வேள்வித் தீயைப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு உரியது.
குறையாத செல்வத்தையும் வெற்றி பொருந்திய படையையுமுடைய
மூவேந்தருள் ஒருவன் தனக்குத் துணையாகப் போரிட வேண்டுமென்று உன்னைப் புகழ்ந்து
உனக்கு அளிக்கும் பொருள் உன் குடியை வாழ்த்தி வரும் பரிசிலர்க்கு உரியது.
அருந்ததியைப் போல் கற்பில் சிறந்தவளும் மெல்லிய மொழியுமுடையவளாகிய
உன் மனைவியின் தோள்கள் மட்டுமே உனக்கு உரியதாகவும்,
வெறொன்றும் இல்லாத பெருமிதம் உடையவன் நீ.
Description: (A Song About Malaiyamaan Thirumudikkaari)
Oh Kaari wearing brave kazhals !
Your country cannot be destroyed by the sea.
It cannot be captured by your enemies.
It is the possession of the Andhanaas who light the velvi fire.
The tributes which were given by the three kings are used
for giving those who sing about you.
It is your aim to give all except
your wife who has chastity like Arundhadhi,
sweet words and soft shoulders.
Oh what a greatness you have!
-Kapillar
முலம்:
http://puram400.blogspot.in/2009/11/122.html
No comments:
Post a Comment