பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பொதுவியல்.
துறை: பொருண் மொழிக் காஞ்சி
ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அதுநற்கு அறிந்தனை ஆயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!
பொருளுரை:
ஒரு திசையில் உள்ள வள்ளல் ஒருவனை நினைத்து,
பல (நான்கு) திசைகளிலிருந்தும் பரிசுபெற விரும்பும்
மக்கள் பலரும் வருவர்.
பெரிய வண்மையுடைய அரசே!
(தகுதியை ஆராயமல்) அவர்களுக்குப் பரிசுகள் அளிப்பது மிகவும் எளிது.
அவர்களின் தகுதியை அறிந்து அவர்களுக்குப்
பரிசுகள் அளிப்பது அரிய செயலாகும்.
அவர்களின் தகுதியை நீ நன்கு அறிந்தாயானால்,
புலவர்கள் அனைவரையும் ஒரே தரமாக (பொது நோக்காக)
மதிப்பிடுவதைத் தவிர்ப்பாயாக
Description (A Song About Malaiyamaan Thirumudikkaari)
Trusting one who gives all, many will come from all the four directions.
To give them is easy.
But giving according to their standard is very hard.
So , oh king having the fame of giving !
Avoid thinking all alike if you wish to give according to their standard.
-Kapilar
முலம்:
http://puram400.blogspot.in/2009/11/121.html
No comments:
Post a Comment