Tuesday, June 28, 2016

புறநானூறு - 124. வறிது திரும்பார்!

புறநானூறு - 124. வறிது திரும்பார்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 

நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர்; நெறிகொளப்
பாடுஆன்று இரங்கும் அருவிப்

பீடுகெழு மலையற் பாடி யோரே.


பொருளுரை:

நல்ல நாளன்று போகாவிட்டாலும், 
போகும் பொழுது கெட்ட சகுனங்களைக் 
குறிக்கும் பறவைகள் குறுக்கே வந்தாலும், 

மன்னனைச் சந்திக்கூடாத நேரத்தில் 
அவன் அவைக்குள் நுழைந்தாலும், 
தன்மையற்ற சொற்களைச் சொன்னாலும் 
இடைவிடாத ஓசை நிறைந்த அருவிகளுடைய 
பெருமை பொருந்திய மலையையுடைய திருமுடிக்காரியைப் 
பாடியோர் (பரிசு பெறாமல்) வெறுங்கையோடு 
திரும்ப மாட்டார்கள்.


Description: (A Song About Malaiyamaan Thirumudikkaari)

Though the day is not good, 
though the birds show bad omen,
though you go in a time which is not suitable, 
though you praise him with meaningless words, 

Thirumudikkaari who belongs to Mulloor hill 
where the water falls are sounding continuously 
will give to those who sing abot him. 
They won't return with empty hands. 

-Kapilar


முலம்:
http://puram400.blogspot.in/2009/11/124.html

No comments: