Monday, May 9, 2016

புறநானூறு - 96. அவன் செல்லும் ஊர்!

புறநானூறு - 96. அவன் செல்லும் ஊர்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி.
திணை : பாடாண். 
துறை: இயன் மொழி. 

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்ஐ இளையோற்கு
இரண்டு எழுந்தனவால் பகையே; ஒன்றே,
பூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகி

நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றோ
‘விழவுஇன்று ஆயினும், படுபதம் பிழையாது
மைஊன் மொசித்த ஒக்கலொடு துறைநீர்க்
கைமான் கொள்ளுமோ?’ என
உறையுள் முனியும்அவன் செல்லும் ஊரே.

பொருளுரை:

மலர்ந்த தும்பைப் பூவாலான மாலையை அணிந்த அழகிய அகன்ற மார்பினையும், 
திரண்டு நீண்ட பெரிய கையையும் உடைய என் தலைவன் அதியமானின் மகனுக்கு இரண்டு பகைகள் தோன்றி உள்ளன. 

ஒன்று, பூப்போன்ற, மைதீட்டிய கண்கள் பசந்து, தோள்கள் மெலிந்த பெண்கள் காதல் நோயால் இவன் மீது கொண்ட சினம். 

மற்றொன்று, விழா இல்லையாயினும், தவறாது மிகுந்த அளவில் ஆட்டுக்கறியை உண்ட சுற்றத்தினரோடு இவன் வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் பொழுது 
அங்குள்ள மக்கள், இவன் யானைகள் அவர்களுடைய நீர்த்துறைகளில் இறங்கி 
அங்குள்ள நீரை எல்லாம் குடித்துவிடுமோ என்று அவர்கள் கொண்ட வெறுப்பு. 

இவை இரண்டும் இவனுக்குப் பகையாகும்.


Description: (A Song About Pohutezhini)

He , who is the son of our lord Nedumaan Anji, who has beautiful, 
strong chest wearing thumbai flower garland and long hands has two big enmities. 

The ladies who have flower like, ink smeared eyes get pasalai and their shoulders become thin. 
He will give the sorrow of separation to the ladies who lost their hearts on seeing his handsomeness . 

Though there is no festival, the people who ate the flesh of the sheep with their relatives 
fear that his elephants may enter into the water sources like the rivers. 

-Awvaiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/08/96.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

No comments: