Tuesday, May 10, 2016

புறநானூறு - 97. மூதூர்க்கு உரிமை!

புறநானூறு - 97. மூதூர்க்கு உரிமை!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண். 
துறை: இயன் மொழி. 


போர்க்குஉரைஇப் புகன்று கழித்தவாள்
உடன்றவர் காப்புடை மதில்அழித்தலின்
ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
வேலே, குறும்படைந்த அரண்கடந்தவர்

நறுங்கள்ளின் நாடுநைத்தலின்
சுரைதழீஇய இருங்காழொடு
மடைகலங்கி நிலைதிரிந்தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம்மலைத்துஅவர்
குழூஉக்களிற்றுக் குறும்புஉடைத்தலின்

பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே;
மாவே, பரந்துஒருங்கு மலைந்தமறவர்
பொலம்பைந்தார் கெடப்பரிதலின்
களன்உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;
அவன்தானும், நிலம்திரைக்கும் கடல்தானைப்

பொலந்தும்பைக் கழல்பாண்டில்
கணைபொருத துளைத்தோலன்னே
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? தடம்தாள்
பிணிக்கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றுஅவற்கு

இறுக்கல் வேண்டும் திறையே; மறுப்பின்
ஒல்வான் அல்லன் வெல்போ ரான்எனச்
சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்
கழற்கனி வகுத்த துணைச்சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்

இறும்பூது அன்றுஅஃது அறிந்துஆ டுமினே.


பொருளுரை:

போர் புரிவதற்கு விரும்பி, உறையிலிருந்து எடுத்த வாள்கள் 
பகைவரின் காவலுடைய மதில்களை அழித்து அவர்களின் தசைக்குள் மிகவும் மூழ்கியதால் தங்கள் உருவத்தை இழந்தன. 

வேல்களோ, பகைவரின் அரண்களை வென்று அவர்களின் மணம் மிகுந்த கள்ளுடைய நாட்டை அழித்ததால் 
தலைப்பாகத்தோடு கூடிய வலிய காம்பும் ஆணியும் நிலை கெட்டன. 

யானைகளோ, கணையமரங்களால் தடுக்கப்பட்டக் கதவுகளைத் தாக்கி, 
பகைவரின் யானைகளோடு கூடிய அரண்களை அழித்ததால், 
தங்கள் தந்தங்களில் இறுகக் கட்டப்பட்ட பெரிய அணிகலன்களை (கிம்புரிகளை)இழந்தன. 

குதிரைகளோ, பரவலாக ஒன்று சேர்ந்து வந்து தாக்கிய பசும்பொன்னாலான 
அழகிய மாலைகளணிந்த பகைவர்களின் மார்புகளை உருவழியுமாறு வருத்தித் தாக்கிப் போர்க்களத்தில் 
அவர்களை அழித்ததால் தங்கள் குளம்புகளில் குருதிக் கறை கொண்டன.

அதியமான், நிலத்தைத் தன்னுள் அடக்கிய கடல் போன்ற படையுடன், 
கழற்காய் வடிவாகவும், வட்ட வடிவான கிண்ணிகளுடைய கேடயத்தை 
ஏந்திப் பொன்னாலான தும்பை மாலையை அணிந்திருக்கிறான். 

அவ்விடத்து, அவனுடைய சினத்துக்கு ஆளானோர் எப்படி உயிர் தப்ப முடியும்?
பெரிய தாளினையும் பின்னிக் கிடக்கும் நெற்கதிர்களையும் உடைய தலைமையும் 
பழைமையும் கூடிய உங்கள் ஊர் உங்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமானால், 
அவனுக்குச் செலுத்த வேண்டிய திறையை நீங்கள் செலுத்த வேண்டும். 

திறை செலுத்த மறுத்தால் அவன் அதற்கு உடன்பட மாட்டன். 
அவன் உங்களை எதிர்த்துப் போரிடுவான். நான் இவ்வளவு சொல்லியும் 
நீங்கள் என் சொல்லைக் கேட்கவில்லையானால், 
மென்மையும் கழற்காயின் உதவியால் வகுத்து சுருட்டி 
முடியப்பட்ட கூந்தலும் சிறிய வளையல்களையும் அணிந்த உங்கள் உரிமை மகளிரின் தோள்களைத் 
தழுவமுடியாமல் அவர்களை விட்டு நீங்கள் பிரியப் போவதில் (இறக்கப் போவதில்) வியப்பில்லை. 
அதை அறிந்து போர் செய்க!


Description: (A Song About Adhiyamaan Nedumaan Anji)

As the swords destroyed the forts of the enemies and pierced the bodies of the enemies, 
they lost their beauty due to damage. 

As Adhiyan's vels went through the forts of the enemies and destroyed the forests which had sweet toddy, 
they lost their good appearance. 

As his fighting elephants dash against the strong doors and killed the elephants of the enemies, 
they lost their poons which covered their tusks. 

As his horses ran over the chests of the enemies, their hoofs had blood stain. 
He stood with his shield which was pierced by arrows and he had worn golden thumbai garland. 
Those who become the enemies of Nedumaan Anji cannot live. 

If you wish your fertile land is to be yours, you go and pay the tribute. 
If you don't listen to me , you will leave your wives who have soft hair and beautiful bangles 

There is no wonder in it. Before coming to fight with , you think these effects. 
-Avaiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/09/97.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

No comments: