புறநானூறு - 95. புதியதும் உடைந்ததும்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண்.
துறை: வாண் மங்கலம்
இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ; என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன்உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.
பொருளுரை:
செல்வம் இருந்தால் மற்றவர்களுக்கு உணவளித்துப் பிறகு தான் உண்ணுவதும்,
செல்வம் இல்லையானால் (குறைந்தால்) தன் உணவைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும் பண்புடைய,
வறிய சுற்றத்தார்களின் தலைவனாகிய பெருமைக்குரிய என் வேந்தன் அதியமானின் கூர்மையான வேல்கள்,
பகைவரைக் குத்தியதால் பக்கமும் நுனியும் முரிந்து கொல்லர்களின் சிறிய உலைக்களத்தில் எந்நாளும் உள்ளன.
ஆனால், உன் படைக்கருவிகளான இவை, மயில் தோகை அணிவிக்கப்பட்டு,
மாலை சூட்டப்பட்டு, வலிய திரண்ட பிடிகளை உடையதாய் நெய் பூசப்பட்டு,
அழகு செய்யபட்டு காவல் மிக்க பெரிய இடத்தில் உள்ளன.
Description: (A Song About Adhiyamaan Nedumaan Anji)
These weapons are adorned with the feathers of the peacocks,
garlands and are ghee applied to protect from getting rust.
These weapons are kept in a safe place.
But those weapons of Adhiyamaan are in the blacksmithery because they are damaged due to the use of attacking the enemies.
If he has wealth, he will give it to the poor.
Though he has no wealth, he will share his food with many.
He is the leader of the poor.
-Awvaiyaar

No comments:
Post a Comment