Saturday, May 7, 2016

புறநானூறு - 94. சிறுபிள்ளை பெருங்களிறு!

புறநானூறு - 94. சிறுபிள்ளை பெருங்களிறு! பாடியவர்: அவ்வையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை : வாகை. துறை: அரச வாகை. ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின், நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை பெரும எமக்கே; மற்றதன் துன்னருங் கடாஅம் போல இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே. பொருளுரை: பெரும! ஊரில் உள்ள சிறுவர்கள் தனது வெண்மையான தந்தத்தைக் கழுவுவதற்கு நீர்த்துறையில் (பொறுமையாக) அமர்ந்து இருக்கும் பெரிய யானையைப் போல நீ எமக்கு இனிமையானவன். ஆனால், உன் பகைவர்க்கு, நீ நெருங்குதற்கு அரிய மதம் கொண்ட யானையைப் போல இன்னாதவன். Description: (A Song About Adhiyamaan Nedumaan Anji) The elephant which is brought to the pond for bathing gives pleasure to the young children in the village. Oh Nedumaan Anji ! You are sweet to the poets like us. Like the elephants ' madham harms the enemies, you also give sorrow to your enemies. -Awvaiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/08/94.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

No comments: