Friday, May 6, 2016

புறநானூறு - 93. பெருந்தகை புண்பட்டாய்!

புறநானூறு - 93. பெருந்தகை புண்பட்டாய்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. 
துறை: அரச வாகை. 

திண்பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்றுஅமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்

நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்துஅவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த

நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய
அருஞ்சமம் ததைய நூறிநீ

பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே.


பொருளுரை:

பெருந்தகையே! உன்னை எதிர்த்து வந்த பெருமை இல்லாத மன்னர்கள் 
உன்னுடைய முற்படையையே தாங்கமுடியாமல் சிதறி ஓடினர். 

அம்மன்னர்கள் (அவ்வாறு ஓடியதால்), நோயுற்று இறந்தவர்களின் உடலைத் தழுவி, 
அவர்கள் மேல் உள்ள ஆசையை மறந்து, அவர்கள் போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) 
அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, 

செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி, 
அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, 
“தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என வாளால் 
பிளந்து அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். 

வரிகளை உடைய வண்டுகள் ஒலித்து வாயில் புகுகின்ற மதம் கொண்ட யானைகளைப் போர்க்களத்தில் நெருங்கி 
அழித்து விழுப்புண் பட்டதால், இனி வலிய கட்டமைந்த முரசம் “இழும்” என்னும் ஒலியுடன் முழங்குமாறு போரில் வெல்வது எப்படி? 
பகைவர்கள் ஓடியதால் இனி, போர்கள் நிகழ வாய்ப்பில்லை; அதனால் போரில் வெல்லும் வாய்ப்பும் இல்லை என்பது பொருள்.


Description: (A Song About Adhiyamaan Nedumaan Anji)
There is no chance to go on a war hearing the drum beat of the enemies. 
They who come to fight with you have scattered by your army. 

They escaped from the shame of being cut by the sword, 
being lay on the tharuppai grass and being say let them go to the heaven like those who died in the war. 

Oh Anji ! You have killed the enemies' elephants which are crowded by beetles with lines for their madha water. 
You have the fame of getting brave wounds. 

-Awvaiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/08/93.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

No comments: