Thursday, May 5, 2016

புறநானூறு - 92. மழலையும் பெருமையும்!

புறநானூறு - 92. மழலையும் பெருமையும்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை.
துறை: இயன் மொழி.
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீஅருளல் மாறே.
பொருளுரை:
குழந்தைகளின் மழலை யாழிசையோடும் ஒத்து வராது;
தாளத்தோடும் பொருந்தாது;
பொருள் அறிவதற்கும் முடியாது.
அது அவ்வாறு இருப்பினும், தந்தையர்க்கு அம்மழலைச் சொற்கள் குழந்தைகள் மீது அன்பை வரவழைக்கின்றன.
பகைவர்களுடைய காவல் மதில்களையும் பல அரண்களையும் வென்ற அதியமான் நெடுமான் அஞ்சியே!
என் சொற்களைக் கேட்டு நீ என்னிடம் அன்பு காட்டுவதால்,
என் சொற்களும் குழந்தைகளின் மழலைச் சொற்கள் போன்றனவே
Description: (A Song About Adhiyamaan Nedumaan Anji)
It does not resemble the music of the yaazh.
It does not go with the timely beat.
It does not have clear meaning.
Oh Adhiyamaan Nedumaan Anji ! You have win forts and walls of the enemies.
You have given me this rare gooseberry to make me live long.
My praising words about your kindness makes you happy as the child's babble gives pleasure to its parents.
-Awvaiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/08/92.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html



No comments: