Wednesday, May 4, 2016

புறநானூறு - 91. எமக்கு ஈத்தனையே!

புறநானூறு - 91. எமக்கு ஈத்தனையே!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை. 
துறை: வாழ்த்தியல். 

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி

பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,

ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.


பொருளுரை:

வெற்றி மிகுந்த, குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போர்க்களத்தில் வென்ற கழலணிந்த காலும், 
வளையணிந்த பெரிய கையையும், 
அழன்ற கள்ளையும் உடைய அதியர் தலைவனே! 
பகைவர்களைப் போரில் வெல்வதால் பெறும் செல்வத்தையும் 
பொன் மாலையையும் உடைய அஞ்சியே! 

பழைய பெரிய மலைப்பிளவின்கண் 
அரிய உயரத்தில் இருந்த சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனியினால் விளையும் (சிறந்த) 
பயனைக் கூறாது தன்னுள் அடக்கிச் சாதல் நீங்க எனக்கு அளித்தாயே! 
நீ, பால் போன்ற பிறை நெற்றியிலே இருந்து அழகு செய்யும் தலையையும், 
நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையும் உடைய கடவுள் (சிவன்) 
போல் நிலைபெற்று வாழ்க!


Description: (A Song About Adhiyamaan Nedumaan Anji)

Oh Adhiyamaan Nedumaan Anji ! 
You have long hands which killed enemies with sword in many battles. 
You have worn bracelets on your hands. 
You have worn sweet smelling garlands with sweet smelling honey. 
You have worn golden garland to show your victory. 

Oh our lord ! Long live like god Siva who has worn milk 
like crescent moon on his head and has a throat which is like sapphire. 
You don't want to eat the rare gooseberry and live long.
You don't say about its greatness to me 
and give it to me and make me to live long. 
You are such a great person. -Awvaiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/07/91.html

http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

No comments: