பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்.
துறை: விறலியாற்றுப்படை.
ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்
தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!
செல்வை யாயின், சேணோன் அல்லன்;
முனைசுட எழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின், மழகளிறு அணியும்
பகைப்புலத் தோனே பல்வேல் அஞ்சி
பொழுதுஇடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கஅவன் தாளே!
பொருளுரை:
காவடியில் ஒரு பக்கம் பதலையும்
ஒரு பக்கம் உள்ளே துளை உள்ள சிறிய முழவும் தொங்குமாறு தூக்கிக்கொண்டு,
”என் கவிழ்ந்த பாத்திரத்தை நிரப்புபவர் யார்?” என்று கேட்டுக்கொண்டு பாலை நிலத்திடத்து இருந்த விறலியே!
போர்க்களத்திலிருந்து எழுந்த இருள் போன்ற புகை,
மலையைச் சூழும் மேகங்களை போல இளைய யானைகளைச் சூழும்
பகைவர் நாட்டில் பல வேற்படைகளையுடைய அதியமான் அஞ்சி உள்ளான்.
நீ அவனிடம் செல்வதாக இருந்தால், அவன் அருகில்தான் உள்ளான்.
அவன் ஒரு பொழுதும் தவறாமல் மிருதுவான மென்மையான
அடைபோன்ற கொழுத்த புலால் உணவால் இரப்போரின் ஈரம் உலராத பாத்திரங்களை நிரப்புவான்.
வறுமைக் காலத்திலும் அவன் இரப்போர்க்கு அளிப்பதில் வல்லவன்.
வாழ்க அவன் திருவடிகள்!
Description:(A SongAbout Adhiyamaan Nedumaan anji)
Oh Virali ! You are bearing a kaavadi.
At one end of the kaavadi, there is a padhalai and at the other end there is a muzha.
You are walking with a thought , “who will fill up my vessel ? “
You go to Adhiyamaan. His palace is not so far.
The smoke which arose when the fire was lighted to destroy
the enemies cover the young elephants like the clouds that cover the hills.
He who has a vel is in the nearby enemy country.
He will fill up your eating vessels with sweet fleshy food , so that it never goes empty.
Though the world suffers with poverty, he will not fail to give you.
Let his golden kazhals live who will give to the beggars.
-Avaiyaar
முலம்:
http://puram400.blogspot.in/2009/09/103.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html
No comments:
Post a Comment