பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை: அரசவாகை.
போற்றுமின் மறவீர்! சாற்றுதும் நும்மை;
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது
இளையன்என்று இகழின் பெறல்அரிது ஆடே.
பொருளுரை:
வீரர்களே! உங்களுக்கு நான் (ஒன்று) கூறுகிறேன்!
ஊர்ச் சிறுவர் விளையாடுவதால் கலங்கும் அளவுக்கு நீர் குறைவாக,
அவர்களின் கால் அளவே இருந்தாலும், அந்த நீரில்,
முதலை யானையை இழுத்து, வென்று வீழ்த்திவிடும்.
அந்த முதலை போன்றவன் என் தலைவன்.
அவனுடைய ஊராகிய தகடூரில் அவனை வெல்வது உங்களால் இயலாத செயல்.
அவனுடைய நுண்ணிய ஆற்றலையும் செயல்களையும் சிந்தித்துப் பார்க்காமல்,
அவன் இளையவன் என்று அவனை
இகழ்ந்தால் உங்களால் வெற்றி பெற முடியாது.
(இனியாவது) உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
Description:(A SongAbout Adhiyamaan Nedumaan anji)
Oh enemy warriors ! I am telling you this.
Save yourself.
Though the water source is so small so that small children stir the water with their ankles,
the crocodiles in that water source will be strong enough to kill the strong elephants.
Our lord Nedumaan Anji is also having such strength.
Not knowing his brave deeds, if you wish to have his enmity thinking that he is young,
you cannot succeed.
-Avaiyaar
முலம்:
http://puram400.blogspot.in/2009/09/104.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html
No comments:
Post a Comment