Thursday, April 21, 2016

புறநானூறு - 83. இருபாற்பட்ட ஊர்!

புறநானூறு - 83. இருபாற்பட்ட ஊர்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை. 
துறை: பழிச்சுதல். 


அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்

ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!


பொருளுரை:

கழல் அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையும் உடைய காளைபோன்ற நற்கிள்ளிமேல்
நான் கொண்ட காதலால் என் கைவளைகள் கழல்கின்றன. 

ஆகவே, நான் காதல்கொண்ட செய்தி என் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். 
அவன் வலிய தோள்களைத் தழுவவேண்டுமென்று என்ற எண்ணம் தோன்றுகிறது. 
ஆனால், அவையில் பலரும் இருப்பதால் அவனைத் தழுவுவதற்கு நாணுகிறேன்.

 நான் என் காதலை வெளிப்படுத்தாமலேயே என் தாய்க்கு என் காதல் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம்; 
மற்றொரு பக்கம், நான் காதலை வெளிப்படுத்தினால் ஊர் மக்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற நாணம். 

அச்சத்திற்கும் நாணத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு நான் நடுக்கமடைவதுபோல், 
நற்கிள்ளியை ஆதரிப்பதா அல்லது மல்லனை ஆதரிப்பதா என்று புரியாமல் மயங்கும் இவ்வூர் 
ஒரு கட்சியாக இல்லாமல் இரு கட்சியாய் இருந்து என்றும் என்போல் பெரிய நடுக்கம் உறுக.

Description: (A Song About Sozhan Porvai Kopperu Narkkilli)

I afraid that I am becoming lean on thinking Kopperu Narkkilli, 
who has brave kazhals on his legs and ink like black beard. 

My bangles will leave me and reveal my love to my mother. 
I wish to embrace his big shoulders which make enemies to run back. 

But, alas ! I am afraid of the big court in between us. 
I am confused by two .i.e my mother and the court. 
Let the village also suffer like me. 

-Perungkozhi Naickkan Mahal Nakkannaiyaar





முலம்:
http://puram400.blogspot.in/2009/06/83.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

No comments: