Saturday, April 23, 2016

புறநானூறு - 84. புற்கையும் பெருந்தோளும்!

புறநானூறு - 84. புற்கையும் பெருந்தோளும்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன் : சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை. 
துறை: பழிச்சுதல்


என்ஐ, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போரெதிர்ந்து என்ஐ போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்

ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!


பொருளுரை:

என் தலைவன், கூழ் போன்ற உணவை உண்டும் பெரிய தோளை உடையனாக உள்ளான். 
நான் அவன் இருக்கும் இடத்திற்கு அருகிலிருந்தும் (அவனோடு கூட முடியாமையால்) பசலையால் பொன்னிறமானேன். 

போரை ஏற்று என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால், ஒலிமிக்க விழாக்கோலம் கொண்ட இவ்வூரில், 
செருக்குடன் போருக்கு வரும் வீரர்களின் நிலைமை, 
உப்பு விற்கப் போகும் உமணர்கள் தாங்கள் செல்லும் கடினமான வழியை நினைத்து அஞ்சுவார்களே, 
அதே நிலைமைதான்.


Description:(A Song About Sozhan Porvai Kopperu Narkkilli)

Though my lord is in poverty so that he eats porridge, he has big shoulders which make the enemies fear. 
Though I have the chance of seeing him from a nearby place, 
I have gold like pasalai on my body as I cannot enjoy him. 

If my lord goes to the battle field, 
he will make the proud warriors to tremble like 
the salt vendors fearing to go through a lonely way where the war has taken place. 
-Perungkozhi Naickkan Mahal Nakkannaiyaar



முலம்:
http://puram400.blogspot.in/2009/07/84.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

No comments: