இப்பாட்டில் ஆலத்தூர் கிழார், கிள்ளிவளவன் கருவூரை முற்றுகையிட்டு இருந்தபோது, அடைபட்டிருந்த கருவூர் மன்னன்,
சோழனுடைய வீரர் தன் நகர்ப்புரத்துக் காட்டிலுள்ள காவல் மரங்களை வெட்டுவதால் உண்டாகும் ஓசை தன் செவிப்பட்டும் போர்க்கு வாராது அஞ்சிக் கிடப்பது கண்டு,
புறநானூறு - 36. நீயே அறிந்து செய்க!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
குறிப்பு: சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது.
அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீயளந் தறிதிநின் புரைமை வார்கோற்
செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்ல னரஞ்செ யவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரந் தடியு மோசை தன்னூர்
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப
ஆங்கினி திருந்த வேந்தனொ டீங்குநின்
சிலைத்தார் முரசங் கறங்க
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே.
பொருளுரை:
சோழனை நோக்கி, “வேந்தே! அழகிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த செறிந்த பரல்கள் உடைய சிலம்பையும்,
சிறிய வளையல்களையும் அணிந்த மகளிர் பொன்னால் செய்யபட்ட கழற்காய்களை வைத்து,
பகைவர்களால் காணப்படும் அண்மையில்,
திண்ணைபோல் உயர்ந்த மணல்மேடுகளில் இருந்து விளையாடும் குளிர்ச்சியான ஆன் பொருந்தம் என்ற அமராவதி ஆற்றின் வெண்ணிறமான மணலைச் சிதற விளையாடுகிறார்கள்.
வலிய கைகளையுடைய கொல்லன் அரத்தால் கூர்மை செய்த அழகிய வெட்டு வாயினை உடைய நீண்ட கைப்பிடியுடைய கோடாலிகள் வெட்டுவதால்
நின்ற நிலை குலைந்து பூமணம் கமழும் மரங்களின் நெடிய கிளைகள் துண்டாகி விழ,
காடு முழுவதும் காவல் மரங்களை வெட்டும் சப்தம் தனது ஊரின் நீண்ட கோட்டைச் சுவரின் உள்ளே தனது காவலையுடைய அரண்மனையில் ஒலிக்கிறது.
அதைக் கேட்டும் மானமின்றி அங்கே அரண்மனை யில் மகிழ்வாக இருந்த வேந்தனுடன் இவ்விடத்
தில் வானவில் போன்ற வண்ணங்கள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முரசு ஒலிக்க,
அவனுடன் போர்செய்வது வெட்கப்பட வேண்டிய செயல் ஆகும்.
ஆதலால், உன் பகைவனாகிய சேரனை, கருவூர் மன்னனைக் கொல்வதானாலும்,
கொல்லாமல் விடுவதானாலும் அவற்றால் உனக்கு வரும் பெருமையை நான் சொல்லத் தேவையில்லை,
நீயே ஆராய்ந்து அறிந்து கொள். எனவே அப்போரைச் செய்யாது நிறுத்தி விடு"
என்று ஆலத்தூர்கிழார் கிள்ளிவளவனிடம் கூறிப் போரை விலக்குகிறார்.
Description: (A Song About Sozhan Killivalavan)
The ladies who worn silambu and beautiful bangles sit and play kazhangu with pieces of gold on the sand heaped near the Porunai river.
The tall trees with full of flowers fall down making the white sand scatter as they are cut by sharp axes made by the blacksmith who has strong hands.
Though the sound of the falling trees is heard by the king, who is behind the tall walls of the fort, he does not do anything.
He has not the will power to oppose the enemies.
It is shameful to think fighting with such a coward wearing victorious garlands and sounding brave murasu.
I don't know whether you will kill that cowardice king or you will let him alive.
Select which ever is suitable for your greatness. I have nothing to say to you.
-Aalaththoorkkizhaar
முலம்:
1 comment:
Lehenga Online Indian clothing with world wide free shipping is the best online store for Indian clothing. you can bring you the look which you often desired for. Designer Lehenga buy lehenga online in usa at Heenastyle.com
Post a Comment