Sunday, February 28, 2016

புறநானூறு - 35. உழுபடையும் பொருபடையும்!

இப்பாடலில், இப்பாடல் ஆசிரியர் வெள்ளைக்குடி நாகனார் என்னும் சான்றோர், விளைநிலங்கட்கு குடிகள் செலுத்த வேண்டிய செய்க்கடன் சில ஆண்டுகளாய் செலுத்தப்படாமல் அரசர்க்குக் கடனாய் விட, அதனைத் தள்ளி விட்டுத்தரல் வேண்டுமெனக் கேட்க குடிகளின் பொருட்டுக் கிள்ளிவளவனை அடைந்தார்.

புறநானூறு - 35. உழுபடையும் பொருபடையும்!

பாடியவர்: வெள்ளைக்குடி நாகனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். 
துறை: செவியறிவுறூஉ
சிறப்பு: அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள்.
சிறப்பு: 'பாடிப் பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது' என்று இதனைக் குறிப்பர்.


நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்,
அரசுஎனப் படுவது நினதே, பெரும!


அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்


நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!
நினவ கூறுவல்: எனவ கேண்மதி!
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு

உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்,
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய

குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்,
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
வருபடை தாங்கிப், பெயர்புறத் தார்த்துப்,
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை

ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்

நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறம் தருகுவர், அடங்கா தேரே.

பொருளுரை:
இப்பாடல் ஆசிரியர் வெள்ளைக்குடி நாகனார் என்னும் சான்றோர், 
விளைநிலங்கட்கு குடிகள் செலுத்த வேண்டிய செய்க்கடன் சில ஆண்டுகளாய் செலுத்தப்படாமல் அரசர்க்குக் கடனாய் விட, 
அதனைத் தள்ளி விட்டுத்தரல் வேண்டுமெனக் கேட்க குடிகளின் பொருட்டுக் கிள்ளிவளவனை அடைந்தார். 

அவனிடம், " ‘நாடுகெழுச் செல்வத்துப் பீடுகெழு வேந்தனே! நீர் செறிந்த பெரிய கடலை எல்லையாக 
காற்று நடுவே ஊடுருவிச் செல்ல முடியாத வானத்தால் சூழ்ந்த மண் செறிந்த இவ்வுலகில் குளிர்ந்த தமிழ்நாட்டிற்கு 
உரியவராகிய முரசு ஒலிக்கும் படையினை உடைய மூவேந்தருள்ளும் அரசு என்று சிறப்பித்துக் கூறப்படுவது 
உன்னுடைய அரசுதான் பெருமானே! 

விளங்குகின்ற சுடர்க் கதிர்களையுடைய கதிரவன் நான்கு திக்கிலும் தோன்றினாலும் 
ஒளிபொருந்திய கதிர்களையுடைய விண்மீன்கள் தென்திசைக்குச் சென்றாலும் அழகிய குளிர்ந்த காவிரி வந்து பல கால்வாய்களாகப் 
பிரிந்து நீர்வளம் சிறக்கிறது. அதனால் இது மூன்று இலைகளாகப் பிரிந்த வேலினை ஒப்ப காட்சி அளிக்கிறது. 

அசைந்த கணுக்களையுடைய கரும்பின் வெண்மை யான பூக்கள் அசைந்தாடும் நாடென்று சொல்லப் படுவது உனது நாடே ஆகும். 
அத்தகைய நாட்டை உடைய செல்வமும் பெருமையும் உடைய வேந்தே! உன்னிடம் சில செய்திகள் சொல்வேன்; 
என்னுடைய சில வார்த்தைகளைக் கேட்பாயாக! 

அறக்கடவுளே நேரில் அரசர் உருவெடுத்து ஆட்சி செய்வதைப்போல், வளையாத கோல் போன்ற செங்கோலால் 
ஆராய்ந்து ஆட்சி செலுத்தும் உன் ஆட்சியில் உன்னிடம் நீதி கேட்கும் பொழுது மிகவும் எளியவர்கள் இங்கு, 
மழைத்துளியை விரும்பி வேண்டிய பொழுது பெருமழை பெய்யப் பெற்றது போல வேண்டிய நீதியைத் தக்க சமயத்தில் பெறுவர். 

ஞாயிற்றைத் தன்மேற் சுமந்து பக்கம் திரண்ட மேகம் மேலேயுள்ள ஆகாயத்தின் நடுவில் நின்று அங்கே அதன் வெயிலை மறைப்பதுபோல் 
கண்ணொளியுடன் மாறுபட விளங்குகின்ற உனது வானை முட்டிய வெண்கொற்றக் குடை வெயிலை மறைத்தற்கு கொண்டதோ என்றால் அதுவல்ல! 
வருத்தமுற்ற குடிமக்களை நிழல் கொடுத்து காப்பதற்காகவே உள்ளது கூரிய வேலினையுடைய வளவ! 

உள்ளே வயிரமில்லாத இளைய பனந் துண்டங்கள் வேறு வேறாகக் கிடப்பது போல யானைகளின் திரட்சியான கூட்டம் பொருதும் 
இடமகன்ற போர்க் களத்தில் வருகின்ற பகைவர் படையை எதிர் நின்று போரிட்டு பகைவர் தோல்வியுற்று புறமுதுகிடு 
வதைக் கண்டு ஆரவாரித்து உனது போர் செய்யும் படை தரும் வெற்றியும் உழவர்களின் கலப்பை ஊன்றி நிலத்தில் 
உழுவதால் விளைந்த நெல்லின் பயனே ஆகும். 

மழை பெய்யும் காலத்தில் பெய்யத் தவறினாலும், விளைச்சல் குறைந்தாலும் இயல்பான காரணங் களல்லாமல் செயற்கையாக
மக்களது உழைப்பை யும் மீறி ஏற்பட்டாலும் அரசரையே பழித்துரைக்கும் இந்த இடமகன்ற பரந்த உலகம். 

அதனை நன்றாக அறிந்தாயென்றால் நீயும் புறம் சொல்வோரது உறுதியில்லாத சொற்களை மனதில் கொள்ளாமல் 
ஏரைப் பாதுகாக்கும் உழவர்களின் குடியைப் பாதுகாத்து அக்காவலாலே ஏனைய குடிகளையும் பாதுகாக்க வேண்டும். 
அவ்வாறு செய்யின், உனக்கு அடங்காத பகைவர்களும் உன் பாதங்களைப் போற்றுவர்’ என்று சோழன் கிள்ளி வளவனுக்கு 
வெள்ளைக்குடி நாகனார் அறிவுறுத் துகிறார். 

Description: (A Song About Sozhan Killivalavan)

Oh king ! You are the only person who has the greatness to be called as king 
among kings who rule the fertile Thamizhnaadu which is in this earth 
which has blue seas as boundary and which is spread up to the sky 
where there is no movement of the air. 

Your country is the only fertile country which has the greatness of being fertile even 
if the sun appears on all the eight directions and hurts with its hotness. 

Though the Venus appears in the south , the cold , 
beautiful Kaaviri river runs through several canals and makes the land fertile. 
The sugarcane with white flowers look like the fence made up of vels. 

Oh king having greatness and fertility ! Listen my following words which are for your good. 
The justice given by you without any deviation from ethics is like the rain 
which showers in the expected time. 

Your white victorious umbrella, which is up to the sky where there are rainy clouds , 
is not merely an umbrella which protects the hotness of the sun. 

It is the one which removes the sorrows of your people/ it is the symbol of kindness 
and it showers mercy. Oh Killivalavaa having a sharp vel ! 

Your enemies are like the young palm tree which is cut into many pieces. 
You remember that the victory and the fame which were brought by your warriors 
defeating the enemies' elephant army is due to the food 
which was cultivated by the farmers with their plows. 

The world will scold only the king for the failure of the seasonal rain, 
the decrease of the fertility of the land and other artificial harms. 

Oh king ! If you realize this, avoid the false statements, 
save the farmer community and do good to the people, your enemies will also obey and praise you. 

-Vellaikkudi Naahanaar

No comments: