Wednesday, February 24, 2016

புறநானூறு - 31. வடநாட்டார் தூங்கார்!

புறநானூறு - 31. வடநாட்டார் தூங்கார்!

பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :வாகை. 
துறை : அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய அச்சத்தால்

துஞ்சாக் கண்ணர் ஆயினமை.
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,

நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்
பாசறை யல்லது நீயொல் லாயே;
நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;
போர் எனில் புகலும் புனைகழல் மறவர்,

காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;
செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,
குண கடல் பின்ன தாகக், குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப,

வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.


பொருளுரை: 

உலக வாழ்க்கையில் மக்களால் நெறியறிந்து எய்துதற்குரிய சிறப்புடைய முறைமையால் பொருளும் இன்பமும் 
அறத்தின் பின்னே வரும் காட்சி போல சேர பாண்டியர் ஆகிய இருவரது குடையும் பின் வர மேலான புகழுடைய உனது ஒரே வெண் கொற்றக்குடை 
நிறமும் அழகும் உடைய திங்களைப்போல் வெகு தொலைவில் உயர்ந்து விளங்க நல்ல தணியாத புகழை விருப்புடன் நினைந்து 
வெல்லும் போரினைச் செய்யும் பாசறையில் இருப்பதல்லாது உனது நகரின் அரண்மனையில் இருப்பதற்கு உடன்படமாட்டாய் நீ! 

யானைக் கொம்பிலுள்ள முனைப்பூண் மழுங்கி, 
முகம் தேய மண்டியிட்டு பகைவரின் காவலை யுடைய கோட்டை மதிற் சுவரைக் குத்தும் உனது யானைகள் 
அடங்காது இருக்கின்றன. போரென்று அறிந்து விரும்பி அணிந்த வீரக் கழலையுடைய உனது மறவர்களும் 
காட்டின் நடுவில் அமைந் திருந்த பகைவர் நாடு மிகத் தொலைவில் இருப்பதால் நாங்கள் செல்ல மாட்டோம் எனச் சொல்ல மாட்டார்கள். 

பகைவர் நாட்டில் ஆரவாரத்துடன் வெற்றிவிழாக் கொண்டாடி அங்கேயே பகைப்புலத்தில் தங்கியும், 
கிழக்குக் கடற்கரையைப் பின்னால் விட்டு நீங்கியும், மேற்குக் கடல் பகுதியை அடைந்து அக்கடலின் வெண்ணிறத் தலை போன்ற அலைகள் உனது குதிரைகளின் குளம்புகளைத் தழுவ, 
நீ வலமாக ஒவ்வொரு நாடாக வரலாமென எண்ணி மனம் அலைபாயக் கலக்கமுற்று நெஞ்சம் நடுங்கித் துன்பம் மேலிட 
வடநாட்டிலுள்ள அரசுகள் உறக்கத்தைத் துறந்த கண்களை உடையனவாயின. 


Description: (A Song About Sozhan Nalangkilli)

Due to the excellence of ethics, money and pleasure are placed after it. 
Like that the victorious umbrellas if the Seraa and Paandiyaa are placed after the victorious umbrella of the Sozhaa which shines like the full moon. 
It spreads the fame of the Sozhaa fa r off. 

Oh Sozhaa ! You wish only victorious fame got from brave wars. 
You wish to live in war camps and do not wish anything else.

Your fighting elephants are awaiting for attacking the walls of the enemies' forts so that the edges of their tusks become blunt.
They never keep quiet. Your warriors who have won kazhals feel happy if war comes. 
They are without fear though the enemies' countries are far away among the forest.

 So your enemies are shivering without sleep, thinking that you will come to the northern side with your army after celebrating your success . 
They think that you will eave the eastern sea and reach the western sea so that the waves of the seas wet the hoofs of your horses. 
-Kovoorkkizhaar


முலம்:
http://eluthu.com/kavithai/133952.html
http://thamizhanna.blogspot.ie/2010/07/purananooru-26-to-35-english.html

1 comment:

Heenastyle USA said...

Buy gorgeous women indian designer Sarees Online for occasions like wedding henna saree, bridal saree, festivals saris with various discounted price at Heena Style Saree. Shop for the range of designer sarees, silk sarees, cotton sarees, lehenga sarees. http://www.heenastyle.com/sarees