"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Friday, December 26, 2014
குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை வழிகள்
நம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டமே மிகசிறந்த அளவில் நீரை சுத்திகரிப்பதோடு, நீரை குளிர்விக்கவும் பயன்படுகிறது. இயற்கை தந்த பியூரிபையர்கள் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரம்.
தேத்தான் கொட்டை:
முருங்கை விதை:
துளசி:
செப்புப் பாத்திரம்: உள்ளே ஈயம் பூசப்படாத செப்புக் குடத்தில் நீரை நிரப்பிப் பருகினால், உடலுக்குப் புத்துணர்வு
வெட்டிவேர் மற்றும் நன்னாரி: நீரில் வெட்டிவேர் மற்றும் நன்னாரி வேரைத் துணியில் முடிச்சாகக் கட்டி போட்டு, பின்னர் அந்த நீரினைப் பருகினால் கோடைக் காலத்தில் ஏற்படும் அதிகத் தாகத்தைத் தீர்ப்பதோடு, உடல் வெப்பத்தையும் குறைக்கும்.
http://news.vikatan.com/article.php?module=news&aid=36306
தேற்றான் கொட்டை அடிப்படையில் மருத்துவத் தன்மை கொண்டது. இதன் மூலம் சித்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் தேற்றான் கொட்டை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. ஒரு தேற்றான் கொட்டையின் கால் பகுதி அளவுக்கு, கல்லில் தேய்த்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். இதை 10 லிட்டர் நீரில் கலந்து, இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த நீரைப்பார்த்தால் தெளிவாக இருக்கும். பாத்திரத்தின் அடிப்பகுதியில் அசுத்தம் தங்கி இருக்கும். மேல்பகுதியில் உள்ள நீரை மட்டும் வடிகட்டி, குடிக்கலாம். குடிநீர்க் கிணறு உள்ளவர்கள் ஒரு கிலோ தேற்றான் கொட்டையை, கிணற்றில் கொட்டிவிட்டால் போதும். அந்தக் கிணற்று நீர், தெளிந்த ஊற்று நீர் போல இருக்கும். யுரேனியத்தின் கழிவுகளைச் சமன் செய்யும் தன்மை தேற்றான் கொட்டைக்கு உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்
http://www.vikatan.com/pasumaivikatan/2016-nov-10/column/124796-question-and-answers.art
குடிநீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்ற மூலிகைகளை தினம் ஒன்றாக கலந்தும் குடிக்கலாம். உடலுக்கு கூடுதல் நன்மைக் கிடைக்கும்.
http://www.vikatan.com/news/health/76111-drinking-water-so-the-positive-role-of-copper-soaked.art?artfrm=read_please
சென்னையில் உள்ள ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் ‘பம்மல்’ இந்திரகுமார், பதில் சொல்கிறார்.
‘‘கலங்கிய, மாசுப்பட்ட தண்ணீரைச் சுத்திகரிக்க, நம் முன்னோர்கள் தேற்றான் கொட்டையைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். இதைப் பேச்சுவாக்கில் ‘தேத்தான் கொட்டை’ என்றும் சொல்வார்கள். தேற்றான் கொட்டை மரம் மிகவும் அரிதான மரங்களில் ஒன்று. இந்த மரத்துக்கும் நம் முன்னோர்கள் தெய்வீக முக்கியத்துவத்தை அளித்துள்ளனர். தேற்றான் கொட்டை மரத்துக்குப் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் இல்லம், சில்லம், கதலிகம் போன்ற பெயர்களோடு பிங்கலம் என்றும் தொல்காப்பியத்தில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேற்றான் கொட்டை நாட்டு மருந்து கடைகளில் பரவலாகக் கிடைக்கின்றன. ஒரு தேற்றான் கொட்டையின் கால் பகுதி அளவுக்கு, கல்லில், தேய்த்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். இதை 10 லிட்டர் நீரில் கலந்து, இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த நீரைப்பார்த்தால் தெளிவாக இருக்கும். அடிப்பகுதியில் நீரில் இருந்த அசுத்தம் தேங்கி இருக்கும். மேல் பகுதியில் உள்ள நீரை மட்டும் வடிக்கட்டி குடிக்கலாம். ஒரு கொட்டையின் மூலம் குறைந்தபட்சம் 50 லிட்டர் நீரைச் சுத்திகரிக்க முடியும்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நன்றி...
Post a Comment