உலகில் ஏழுபேர் சிரஞ்சீவிகளாய்(என்றும் நிலைத்திருப்பவர்களாய்) இருக்கும் தகுதி பெற்றவர்கள். அவர்களில், விபீஷ்ணன், தன் அண்ணன் என்றும் பாராமல் ராவணனுக்கு நியாயத்தை உணர்த்தியதற்காகவும்; மகாபலி, தன்னையே தானமாக இறைவனிடம் ஒப்படைத்ததற்காகவும்; மார்க்கண்டேயர், இறைவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக, எமனையே வென்றதாலும்; வியாசர், மகாபாரதம் எனும் அழியா காவியத்தை எழுதி, அதைப் படிப்போரின் பாவங்களைப் போக்கி அருள் செய்ததாலும்; பரசுராமர், கொண்ட கடமையில் இருந்து விலகாமல், தந்தை சொல் கேட்டதாலும்; துரோணரின் மகன் அஸ்வத்தாமன், கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக, தன் விசுவாசத்தைக் காட்டியதாலும், சிரஞ்சீவி எனும் நிலையை அடைந்தனர்.
இந்த வரிசையில் முதலாவதாக இடம் பெறுபவர் அனுமன். இவர், தன்னலம் பாராமல், பிறருக்காக சேவை செய்ததால், சிரஞ்சீவியாய் போற்றப்படுகிறார். பெரியாழ்வார் பெருமாளை வாழ்த்தியது போல், தன்னலமற்ற அந்த ராம தொண்டனுக்கு நாமும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வோம்.
2 comments:
கர்ணன் இல்லையா...?
விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்ங்கற மாதிரி இருக்கு உங்க கேள்வி. கர்ணன் தான் போரில் உயிர்விட்டாரே சார்??
Post a Comment