Sunday, September 28, 2014

படித்ததில் பிடித்தது

 'தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ - என்று சொன்னது ஒளவையாரா... நாலடியாரா?
ஒளவையார்தான்! புகழ்பெற்ற பல்வேறு அறக் கருத்துகளை ஒளவையார் சொல்லிச் சென்றுள்ளார். புழக்கத்தில் இருக்கும் அவை ஒளவை சொன்னதுதான் என்பது தெரியாமல் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட சில இவை:
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.
உடன்பிறந்தே கொல்லும் வியாதி.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ?
- இப்படி ஒளவை மொழி ஆயிரம் உண்டு!

No comments: