Wednesday, September 24, 2014

கை வைத்தியம்

* சீதபேதி கடுமையாக இருந்தால், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.
* அடிக்கடி ஏப்பம் வந்தால், வேப்பம்பூவை தூள் செய்து, நான்கு சிட்டிகை எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.


நல்ல கொழுப்பு அதிகரிக்க...
இரவு, இரண்டு பாதாம்களை ஊறவைத்து, காலையில் சாப்பிட்டுவந்தால், நல்ல கொழுப்பு உடலில் அதிகரித்து, இதய நோய் வராமல் காக்கும்.
சளித் தொலைக்கு...
ஒரு கிளாஸ் இளஞ்சூடான பாலுடன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். அரை லிட்டர் நீரில், நறுக்கிய அரை கப் வெண்டைக்காயைப் போட்டு, பாத்திரத்தை மூடிக் கொதிக்கவிடவும். ஒருநாளைக்கு இருமுறை ஆவி பிடிக்க, சளி குறையும்.

சளி, தொண்டைக் கரகரப்பு, இருமல் பிரச்னைகளுக்கு, மிளகை அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு சிறிது சிறிதாக இடைவெளி விட்டு குடிக்கலாம்.
தொடர் தும்மல் பிரச்னைக்கு, ஒரு டம்ளர் நீரில் அரை எலுமிச்சம் பழச்சாறு கலந்து, வெறும் வயிற்றில் குடிக்கலாம்

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22030&ncat=11

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=102247

எளிய வைத்தியம்
ரத்தச் சோகைக்கு (Anaemia):
1/2 தேக்கரண்டி வல்லாரை இலைச்சாற்றுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து 1 மாதம் அருந்தவும்.
மன அமைதிக்கு:
வல்லாரை இலைகளைக் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தினமும் 1/4 தேக்கரண்டி சூரணத்தைத் தேன் அல்லது பசும்பாலோடு சேர்த்து உட்கொள்ளவும்.
தூக்கமின்மை:
1/2 தேக்கரண்டி வல்லாரை பொடியை 1 க தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, இரவில் படுக்கும் முன் குடிக்கவும்.
ஞாபகமறதி:
5 வல்லாரை இலைகளை இடித்துச் சாறெடுத்து, ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்துத் தினமும் உண்ணவும்.

தேமலை விரட்டுங்க! நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்! 

No comments: