பாடியவர்: மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடா நிலை.
சிறப்பு: 'வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்'
என்னும் புலவரது உள்ளச் செவ்வி.
சுவல்அழுந்தப் பலகாய
சில்லோதிப் பல்இளைஞருமே
அடிவருந்த நெடிதுஏறிய
கொடிமருங்குல் விறலியருமே
வாழ்தல் வேண்டிப்
பொய்கூறேன்; மெய்கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர்சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் உன்னிக்
கனிபதம் பார்க்கும் காலை யன்றே;
ஈதல் ஆனான் வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே; ஆயிடை
இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒருநாள்
அருஞ்சமம் வருகுவ தாயின்
வருந்தலும் உண்டுஎன் பைதலம் கடும்பே.
பொருளுரை:
மூட்டைகளைத் தூக்கியதால் தோள்களில் பல தழும்புகளுடைய நானும்,
(குறைந்த அளவில் தலை முடியுடைய) இளஞர்களும், நீண்ட மலைவழியில் தங்கள் கால்கள் வருந்துமாறு
ஏறி வந்த கொடி போன்ற இடையையுடைய விறலியரும் வாழ வேண்டும்.
ஆகவே, பொய் கூற மாட்டேன்; நான் கூறுவது மெய்யே.
புறமுதுகு காட்டி ஒடாத கொள்கையையுடைய வலியோரின்
வழித்தோன்றலே! உயர்ந்த மலைச் சிகரஙளுடைய நாஞ்சில் நாட்டுக்கு அரசே!
பரிசில் பெறும் எண்ணத்தை மறவாமல் நாங்கள் வந்துள்ளோம்.
உன்னைப் பார்ப்பதற்கேற்ற சரியான சமயத்தை எண்ணிப் பார்க்க இது ஏற்ற காலம் இல்லை.
உன் வேந்தன் (சேரன்) உனக்கு வேண்டியதெல்லாம் வழங்குகிறான்.
அவனுக்காக உயிர் விடுவதற்குக் கூட நீ அஞ்சுவது இல்லை.
இந்நிலையில் பெரிய நிலம் இரண்டு படுவது போன்ற போர் வந்தாலும் வரலாம்.
போர் வந்தால் நீ போருக்குப் போய் விடுவாய். அவ்வாறு, நீ போருக்குச் சென்று விட்டால்,
என் குடும்பமும் நானும் வறுமையால் வருந்துவோம்.
ஆகவே, இப்பொழுதே எங்களுக்குப் பரிசளிப்பாயாக
Description:(A Song About Naanjil Valluvan)
The youths having small tied up hair and the Viraliyar
who have creeper like waist are waiting for a long time to get your gift.
I won't lie to get gifts from you for their living.
I am telling the truth .
You are the successor of a dynasty which never retraces in a war.
Oh lord of the Naanjil hill ! My poverty does not allow me wait until you give gifts to me.
Your Seraa king is ready to give whatever you need.
You are ready to give your life itself to the Seraa king .
If a war comes suddenly and if you go to the war,
myself and my relatives cannot wait for the gift which will be given by you after the war.
So before the war, you give up the gifts and remove our hunger.
-Marudhan Ilanaahanaar
மூலம்:
http://puram400.blogspot.ie/2010/01/139.html
http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html
No comments:
Post a Comment