பாடியவர்: மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: பாணாற்றுப் படை.
ஆனினம் கலித்த அதர்பல கடந்து
மானினம் கலித்த மலையின் ஒழிய
மீனினம் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண!
நீயே பேரெண் ணலையே; நின்இறை
மாறி வாஎன மொழியலன் மாதோ;
ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளிமரீஇய வியன்புனத்து
மரன்அணி பெருங்குரல் அனையன் ஆதலின்
நின்னை வருதல் அறிந்தனர் யாரே!
பொருளுரை:
பசுக்களின் கூட்டம் மிகுந்த வழிகளைக் கடந்து,
மான் கூட்டங்கள் நிறைந்த மலைகளைக் கடந்து,
மீன்கள் மிகுந்த பல நீர்த்துறைகளை நீந்திப் பரிசு பெறலாம் என்ற எண்ணத்தோடு
வளமான இசை எழுப்பும் சிறிய யாழுடன் கந்தைத் துணி உடுத்தி வந்த மூத்த பாணனே!
நீ பெரிய எண்ணங்கள் உடையவன். உன் அரசன் (நாஞ்சில் வள்ளுவன்)
’மற்றொரு நாள் வா’ என்று கூறி உனக்குப் பரிசளிக்காமல் உன்னை அனுப்ப மாட்டான்.
தழைத்த, கரிய கூந்தலும் தேர்ந்தெடுத்த அணிகலன்களும்
உடையவளின் கணவனாகிய நாஞ்சில் வள்ளுவன்,
கிளிகள் தங்கியிருக்கும் பெரிய தினைப்புனத்தில் உள்ள மரப் பொந்தில்
வைக்கப்பட்ட பெரிய நெற்கதிரைப் போன்றவன்.
அங்கு, கிளிகள் வேண்டும் பொழுது சென்று அவற்றைத் தின்னலாம்.
அதுபோல் நாஞ்சில் வள்ளுவனிடத்துப் பரிசிலர் பலமுறை செல்லலாம்.
ஆகவே, நீ முன்னர் வந்ததை அறிந்தவர் யார்?
Description:(A Song About Naanjil Valluvan)
Oh old Paanaa !
You have come through the forest way where there are cow herds,
the hilly way where there are flock of deers and the river way where there are a lot of fish.
You have come with a small yaazh , wearing rags.
You have come with a desire to get gifts. You have a high thought.
The lord whom you wish to sing never says, “I have nothing today. So you go and come tomorrow.“
He is the husband of the beautiful lady who has dense, dark hair.
He is like the ear kept by the parrot in a tree hole.
When you return after getting the gifts from him ,
none can recognize you that you were that old Paanaa in rags.
Your appearance will be totally changed then.
-Marudhan Ilanaahanaar
மூலம்:
http://puram400.blogspot.ie/2010/01/138.html
http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html
No comments:
Post a Comment