பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்
ஏந்தெழில் மழைக்கண் இன்னகை மகளிர்
புல்மூசு கவலைய முள்மிடை வேலிப்
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
பீரை நாறிய சுரைஇவர் மருங்கின்
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்புஓய் ஒழுகை எண்ணுப மாதோ!
நோகோ யானே! தேய்கமா காலை!
பயில்பூஞ் சோலை மயிலெழுந்து ஆலவும்
பயில்இருஞ் சிலம்பிற் கலைபாய்ந்து உகளவும்
கலையுங் கொள்ளா வாகப் பலவும்
காலம் அன்றியும் மரம்பயம் பகரும்
யாணர் அறாஅ வியன்மலை அற்றே
அண்ணல் நெடுவரை ஏறித் தந்தை
பெரிய நறவின் கூர்வேற் பாரியது
அருமை அறியார் போர்எதிர்ந்து வந்த
வலம் படுதானை வேந்தர்
பொலம்படைக் கலிமா எண்ணு வோரே.
பொருளுரை:
இனிய நீருடைய ஆழமான சுனைகளில் பூத்த,
புறவிதழ்கள் ஒடிக்கபடாத முழு செங்கழுநீர் மலர்களால் செய்த ஆடைகள் தங்கள் இடுப்பில் புரளுமாறு,
மிகுந்த அழகும், கருமை நிறமுள்ள கண்களும்,
இனிய சிரித்த முகமும் உடைய பாரி மகளிர் அணிந்திருக்கிறர்கள்.
அவர்கள் இருக்கும் சிறிய வீடு பல தெருக்கள் கூடுமிடத்தில் புல் முளைத்த பாதைகளுடையதாகவும்,
முற்றத்தில் பஞ்சு பரந்தும் முள் செறிந்த வேலியால் அடைக்கப் பட்டதாகவும் உள்ளது.
அங்கே பீர்க்கங்காய்களும் சுரைக்காய்களும் கொடிகளில் முளைத்திருக்கின்றன.
அவற்றிற்குப் பக்கத்தில் ஈச்ச மரத்தின் இலைகள் நிறைந்த குப்பை மேடுகளில்
ஏறிப் பாரி மகளிர் அவ்வழியே வரிசையாகச் செல்லும் உப்பு வண்டிகளை எண்ணுகிறார்கள்.
முன்பு, அவர்கள் வாழ்ந்த பறம்பு மலையில், அவர்களுக்குப் பழக்கமான
பூஞ்சோலைகளில் மயில்கள் எழுந்து ஆடின; மற்றும் குரங்குகள் தாவித் திரிந்தன;
அக்குரங்களும் தின்னமுடியாத அளவுக்கு அங்குள்ள மரங்கள் பயனுள்ள பழங்களும்
காய்களும் பருவமல்லாக் காலத்தும் கொடுத்தன.
அத்தகைய வளம் மிகுந்த இடமாகப் பறம்பு மலை இருந்தது. குறையாது புதுவருவாயை அளிக்கும்
அகன்ற மலையைப் போன்ற தலைமையுடைய பாரியின் நெடிய மலையின் உச்சியில் ஏறி,
மிகுந்த அளவில் கள்ளையும் கூரிய வேலினையும் உடைய தந்தை பாரியின்
அருமையை அறியாது அவனை எதிர்த்துப் போர் புரிய வந்த வலிமைமிக்க படையுடைய வேந்தர்களின்
அழகிய சேணங்களணிந்த செருக்குடைய குதிரைகளை எண்ணிய பாரி மகளிர் இப்பொழுது
குப்பை மேட்டில் ஏறி உப்பு வண்டிகளை எண்ணுகிறார்களே!
இதைக் காணும் பொழுது நான் வருந்துகிறேன்.
என் வாழ்நாள்கள் (இன்றோடு) முடியட்டும்.
Description: (A Song About Vel Paari)
The daughters of Paari are wearing the dresses made up of kuvalai flowers on their waist.
They have very beautiful cold eyes and smile.
They are in the front yard of their small house where the grass is spread.
There is a fence made up of thorns.
On the garbage heap, the ribbed gourd and bottle gourds are spread.
The daughters of Paari stand on the garbage heap and count the salt loaded carts of the salt merchants.
But once they were in the parks where the peacocks were dancing.
There the fruits were spread everywhere by the monkeys while they sprang.
Not only in the season, there were fruits ever.
The hill had new yield.
The daughters of Paari were standing on the hill and counting the horses of the enemies
who did not know the fame and strength of Paari.
But today , they are standing on the garbage heap and counting the salt loaded carts.
On seeing this my mind suffers.
Eventhough seeing this cruelty, I am living.
Let my living days perish.
-Kapilar
முலம்:
No comments:
Post a Comment