பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
சிறப்பு : பறம்பின் வளமை.
ஒருசார் அருவி ஆர்ப்ப, ஒருசார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க உக்க தேக்கள் தேறல்
கல்அலைத்து ஒழுகும் மன்னே; பல்வேல்
அண்ணல் யானை வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!
பொருளுரை:
பல வேற்படைகளுக்குத் தலைமையும்
யானைகளையுமுடைய வேந்தர்களுக்குக் கொடியவனாகவும்
பரிசிலர்க்கு இனியவனாகவும் இருந்த பாரியின் குன்றில் ஒரு பக்கம் ஒலிக்கும் அருவி முழங்கும்;
மற்றொரு பக்கம் இரப்போர் கலங்களில் வார்த்த
இனிய கள் அவர்களின் கலங்கள் நிரம்பி வழிந்து ஒழுகி
அருவி போல் மலையிலுள்ள கற்களை உருட்டிக்கொண்டு ஒழுகும்.
Description: (A Song About Vel Paari)
The water falls will be flowing in one side.
The honey drops which were scattered when poured
into the eating vessels of the Paanaas will flow and roll down small stones.
It is the hill of Paari who is the enemy of the kings who have vels and elephant army.
But today it has lost all its greatness.
-Kapilar
முலம்:
No comments:
Post a Comment