பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை.
துறை: தானை மறம்.
இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
அது போர்! என்னும் என்ஐயும் உளனே!
பொருளுரை:
மணிகள் கோத்த அணிகள் விளங்கும்
(உயர்ந்த பக்கங்களையுடைய) இடையும்,
மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம்
ஆடும் வெகுளிப் பெண்ணே!
அகன்ற இடங்களுடைய உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ?”
என்று என்னைக் கேட்ட போர்ப்படையுடன் கூடிய அரசே!
எங்கள் நாட்டில், அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பு போல்
வெகுண்டு எழும் இளமையும் வலிமையுமுடைய வீரர்கள் உள்ளனர்.
அவர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப்பொதுவில் கட்டித் தொங்கும் தண்ணுமைப் பறைமேல்
காற்று மோதுவதால் உண்டாகும் ஒலி கேட்டு,
“அது போர்ப்பறையின் முழக்கம்!”
என்று பொங்கி எழும் என் அரசனும் உளன்.
Description:(A Song About Adhiyamaan Nedumaan Anji)
Oh Virali having the hip adorned with ornaments made up of precious stones,
young beauty and ink smeared eyes ! Oh king who is asking , “ Is there any body in your vast land who can fight with me ? “ Listen to me.
There are so many warriors who are like the snakes which spring on the striking rods angrily.
You also understand that our lord who rushes to war thinking the noise of the drum
due to the strong wind as the beating of the war drum.
-Awvaiyaar
முலம்:
http://puram400.blogspot.in/2009/07/89.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html
No comments:
Post a Comment