புறநானூறு - 88. எவருஞ் சொல்லாதீர்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.
திணை; தும்பை.
துறை; தானை மறம்.
யாவிர் ஆயினும், கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின்; ஓங்குதிறல்
ஒளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழவுமேம் பட்ட நற்போர்
முழவுத்தோள் என்ஐயைக் காணா ஊங்கே.
பொருளுரை:
அதியமான் ஓங்கிய வலிமையும் ஒளிவிட்டு விளங்கும்
நீண்ட வேலையுமுடைய வீரர்களுக்குத் தலைவன்.
சுடர்விடும் நுண்ணிய வேலைப்பாடுகளுடைய அணிகலன்களை அணிந்த
அழகிய அகன்ற மார்பும் போர்க்கள வெற்றி விழாக்களில்
மேம்பட்ட நல்ல போர்முரசு போன்ற தோளையுமுடைய
என் அரசனாகிய அவனைக் காண்பதற்கு
முன்னே நீங்கள் எவராய் இருப்பினும் முற்படையும்
பிற்படையும் கொண்டு யாம் போரிடுவோம்
என்று கூறுவதைத் தவிருங்கள்.
Description:(A Song About Adhiyamaan Nedumaan Anji)
Who ever you may be.
You don't think winning him with your armies.
Before seeing his big chest which has golden ornaments and muzhavu like broad shoulders,
you may think so.
But after seeing him you will understand that it is impossible to win him.
-Avaiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/07/88.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html
No comments:
Post a Comment