Saturday, May 21, 2016

புறநானூறு - 106. தெய்வமும் பாரியும்!

புறநானூறு - 106. தெய்வமும் பாரியும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 

நல்லவும் தீயவும் அல்ல குவிஇணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்

கடவன் பாரி கைவண் மையே.


பொருளுரை:

நல்லது தீயது என்ற இருவகையிலும் சேராத, 
சிறிய இலையையுடைய எருக்கம் செடியில் உள்ள மலராத பூங்கொத்தாயினும் 
அதுதான் தன்னிடம் உள்ளது என்று அதை ஒருவன் கடவுளுக்கு அளிப்பானானால், 

கடவுள் அதை விரும்ப மாட்டேன் என்று கூறுவதில்லை. 
அது போல், அறிவில்லாதவரோ அல்லது அற்ப குணமுடையவரோ 
பாரியிடம் சென்றாலும் அவர்களுக்கு கொடை வழங்குவதைத் 
தன் கடமையாகக் கருதுபவன் பாரி.


Description:(A Song about Vel Paari)

If one gives erukkam flowers because he has only that no god will refuse to accept it. 
Though they are foolish and have mean qualities, patron Paari will give them with pleasure. 

-Kapilar

முலம்:
http://puram400.blogspot.in/2009/09/106.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html

No comments: