Monday, April 25, 2016

புறநானூறு - 85. யான் கண்டனன்!

புறநானூறு - 85. யான் கண்டனன்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை 
துறை: பழிச்சுதல்.


என்ஐக்கு ஊர் இஃது அன்மை யானும்
என்ஐக்கு நாடு இஃது அன்மை யானும்
"ஆடுஆடு" என்ப, ஒருசா ரோரே;
"ஆடன்று" என்ப, ஒருசா ரோரே;

நல்ல பல்லோர் இருநன் மொழியே;
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
யான்கண் டனன் அவன் ஆடா குதலே.


பொருளுரை:

என் தலைவன் இவ்வூரைச் சார்ந்தவன் அல்லன்; 
இந்த நாட்டைச் சார்ந்தவனும் அல்லன். 

ஆகவே, என் தலைவனுக்கும் மல்லனுக்கும் இடையே நடைபெறும் மற்போரைப் பார்ப்பவர்களில், 
ஒரு சாரார் நற்கிள்ளிக்கு “வெற்றி, வெற்றி” என்பர். 

மற்றொரு சாரார் அவனுக்கு வெற்றி இல்லை என்பர். 
நல்லவர்களாகிய பலரும் கூறும் இருவகையான கூற்றுக்களும் நன்றாகவே இருந்தன.
 (ஆனால், என்னால் அங்கே இருக்க முடியவில்லை.) 

நான் என் அழகிய சிலம்புகள் ஒலிக்க ஓடி வந்து என் வீட்டில் முரசு போல் 
அடிமரம் பருத்த பனைமரத்தில் சாய்ந்து நின்றவாறு அப்போரில் 
என் தலைவன் வெற்றி பெறுவதைக் கண்டேன்.


Description:(A Song About Sozhan Porvai Kopperu Narkkilli)

It is not the village of my lord. 
It is not the country of my lord. 

Some say that he has won. 
Some other say that he has not won. 

But I ran so that my silambu made noise. 
I stood below the palm tree which has pot like foot and saw the victory of Narkkilli over Mallan. 
-Perungkozhi Naickkan Mahal Nakkannaiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/07/85.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

No comments: