Monday, April 18, 2016

புறநானூறு - 80. காணாய் இதனை!

 
புறநானூறு - 80. காணாய் இதனை!

பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: தும்பை.
துறை: எருமை மறம்.


இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே;

நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லற் கடந்துஅடு நிலையே.

பொருளுரை:

இனிமையும் புளிப்பும் கூடிய (அழன்ற ) கள்ளையுடைய ஆமூரில் வலிமை
பொருந்திய மற்போர் வீரன் ஒருவனின் மிக்க வலிமையை அழித்து,
ஒரு கால் அவன் மார்பிலும், மற்றொரு கால் அவன் சூழ்ச்சியைத் தடுக்கும் வகையில்
அவன் முதுகிலும் வைத்துப் பசியோடு மூங்கிலைத் தின்ன முயலும் யானையைப்போல் தலையும் காலும் ஆகிய இரண்டும்
முறிய மோதிப் போரவையில் மற்போர் புரிய வந்த மல்லனை எதிர்த்து நின்று
அவனைக் கொன்ற நிலையை வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய
இவன் தந்தையாகிய தித்தன் விரும்பியோ அல்லது விரும்பாமலோ காண்பானாக.


Description: (A Song About Sozhan Porvai Kopperu Narkkilli)

In the Aamoor town where there is sour toddy,
Narkkilli defeated the strong Mallan.

He placed one of his leg on his chest. With the other leg, he prevented Mallan's efforts.

Like the elephant which comes to eat the bamboo, crushes it by its feet, Narkkilli killed Mallan so that his head and legs got broken.

Thiththan, who is the father of Narkkilli has to see the skill of Narkkilli even if he wishes or not.
-Saaththandhaiyaar
முலம்:
http://puram400.blogspot.in/2009/06/80.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

No comments: