பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை:வாகை.
துறை: அரசவாகை.
வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள்
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து
“விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது” என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர,
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்
மாண்இழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.
பொருளுரை:
வீரக் கழல்கள் அழகு செய்யும், வலிய, நிலை தளராத கால்களையுடைய, வருத்தற்கரிய மிக்க வலிமையுடயவன்
என் இறைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். குகையிலிருந்த புலி இரை தேடுவதற்காக
சோம்பல் முறித்து வெளியே வருவது போல் அவன் போருக்கு வருகிறான்.
அவனுடைய வலிமையை (பொருதற்கரிய அகண்ட மார்பை) மதிக்காமல்,
“நாங்கள் சிறந்தவர்கள்; பெரியவர்கள். நம்மோடு போர் புரிய வந்திருப்பவன் இளைஞன்;
இவனைப் போரில் வென்றால் நாம் கொள்ளை கொள்ளக் கூடிய பொருட்கள் இங்கு பெருமளவில் உள்ளன”
என்று ஏளனத்தோடு கிளர்ந்து எழுந்து அணியணியாக
வந்த ஒளியிழந்த கண்களையுடைய பகைவர்கள் புறமுதுகு காட்டி ஓட,
அவர்களைத் தலையாலங்கானத்தில் கொல்ல விரும்பாமல், அவர்களைத் தொடர்ந்து சென்று,
அவர்களின் மகளிர் நாணம் கொண்டு இறந்து படுமாறு, அவர்களின்
சொந்தமான ஊர்களிலேயே தெளிந்த போர்ப்பறையொலிக்க அவர்களைக் கொன்றான்.
Description:(A Song About Thalaiyaalangkaanaththu Seruvendra Paandiyan Nedunjchezhiyan)
Our lord has the leg strength and shoulder strength which cannot be defeated.
Like the tiger which comes from the cave in search of its prey,
the enemies are coming without respecting the braveness of our lord thinking that they have big armies,
the person to whom they are going to fight is very young and they will get very big treasure.
But our lord did not kill them here. He drove them back to their native towns
and killed them in front of their loving ladies so that they died with shame.
-Idaikkundroor Kizhaar
முலம்:
http://puram400.blogspot.in/2009/05/78.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html
No comments:
Post a Comment