Thursday, March 3, 2016

புறநானூறு - 39. புகழினும் சிறந்த சிறப்பு!

இப்பாட்டில் மாறோக்கத்து நப்பசலையார், 
”வளவ! புறாவின் துன்பத்தைக் களைய வேண்டி உரல் போன்ற பாதங்களுயுடைய 
யானையின் பெரிய தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்ட வெண்மையான எடை காட்டும் நிறைக்கோல் அமைந்த தராசில் புகுந்து தன்னையே அளித்த செம்பியனின் வழித்தோன்றலே! 


புறநானூறு - 39. புகழினும் சிறந்த சிறப்பு!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். 
துறை : இயன்மொழி,
சிறப்பு : வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது.

புறவி னல்லல் சொல்லிய கறையடி 
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக் 
கோனிறை துலாஅம் புக்கோன் மருக 
ஈதனின் புகழு மன்றே சார்தல் 
ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறற் 

றூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினைப்பின் 
அடுதனின் புகழு மன்றே கெடுவின்று 
மறங்கெழு சோழ ருறந்தை யவையத் 
தறநின்று நிலையிற் றாகலி னதனால் 
முறைமைநின் புகழு மன்றே மறமிக் 

கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோட் 
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ 
யாங்கன மொழிகோ யானே யோங்கிய 
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட் 
டிமயஞ் சூட்டிய வேம விற்பொறி 

மாண்வினை நெடுந்தேர் வானவன் றொலைய 
வாடா வஞ்சி வாட்டுநின் 
பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே. 

பொருளுரை:

இப்பாட்டில் மாறோக்கத்து நப்பசலையார், 
”வளவ! புறாவின் துன்பத்தைக் களைய வேண்டி உரல் போன்ற பாதங்களுயுடைய 
யானையின் பெரிய தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்ட வெண்மையான எடை காட்டும் நிறைக்கோல் அமைந்த தராசில் புகுந்து தன்னையே அளித்த செம்பியனின் வழித்தோன்றலே! 

நீ அவன் மரபில் வந்தவனாதலால், இரந்தோர்க்குக் கொடுத்தல் உனது இயல்பேயன்றி உனக்குப் புகழ் இல்லையே! 
அசுரர்க்குப் பகைவர்களாகிய தேவர்களே உன்னை நெருங்குவதற்கு அஞ்சும், அணுகுவதற்கு அரிய மிகுந்த வலிமையுள்ள
வான்தவழும் கோட்டைகளை அழித்த உன் முன்னோர்களை நினைக்கும் பொழுது இங்குள்ள பகைவர்களைக் கொல்வது உனக்குப் புகழும் இல்லையே! 

கெடுதல் வேறு ஏதுமின்றி, 
வீரம் பொருந்திய சோழரது உறையூரின் அவையில் அறம் எப்பொழுதும் நின்று நிலைபெற்றுள்ளதால் 
முறைசெய்து நல்லாட்சி செய்வதும் உனக்குப் புகழ் தருவது இல்லையே! 

அதனால் வீரம் மிகுந்து எழுந்த போரை வென்ற கணையமரத்துக்கு இணையான திண்மையான தோளினையும் 
கண்ணைக் கவரும் மாலைகளை யும், விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய வளவனே! 

அதனால், உனது சிறப்பு மிக்க வலிய தாள்களைப் பாடும்பொழுது, உயர்ந்த எல்லையை அளந்தறிய முடியாத பொன் போன்ற 
நெடிய சிகரங்களை யுடைய இமயத்தில் ஏற்றப்பட்ட தன் காவற் சின்னமாகிய வில்லைப் பொறித்த, 
சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய நெடிய தேர்களை யுடைய சேரன் அழிய அவனது அழிவில்லாத 
வஞ்சி நகரை அழித்த பெருமையை நான் எவ்வாறு சொல்வேன்! நின் வெற்றி யான் பாடும் திறமன்று” 
என்று இக் கிள்ளி வளவனைப் பாராட்டுகின்றார். 


Description:(A Song About Sozhan Killivalavan)
Oh successor of Sebiyan who sit on the balance which is made up of the tusks of the elephant which has mortar like foot, 
in order to remove the sorrow of a pigeon! 

You have born in a family which feels happy in giving to others. 
It is your nature to give happily without saying no to those who come saying that they have nothing. 

So there is nothing special in praising you in this aspect. 
On thinking the great strength of your ancestors who destroyed the strong hanging forts in the sky which are fearful to Devaas who are the enemies of Asuraas. 
Your victory over your enemies does not bring new fame to you. 

As ethics prevails in the court of your brave capital city Uraiyoor, 
your good rule does not bring fame to you. 

Oh Killivalavaahaving victory over wars, having strong shoulders which are stronger than the kanayaa tree, 
having beautiful kanni and having fast moving horse! How can I praise you? 

You destroyed Seran's Karuvoor which has a very strong, safety fort. 
The Seraa engraved his bow on the top of Himalaya which is very high and where golden rays of the sun fall. 

He has a beautiful victorious chariot. 
I don't know what else I can praise as I have praised your great efforts. 
-Maarokkaththu Nappasalaiyaar



No comments: