Monday, February 1, 2016

புறநானூறு - 8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!

புறநானூறு - 8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!

பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் கடுங்கோ வாழியாதன் : சேரமான் செல்வக் கடுங்கோ
வாழியாதன் என்பவனும் இவனே.
திணை : பாடாண். 
துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆம். 

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்,
போகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது ,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்,
கடந்து அடு தானைச் சேரலாதனை

யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.


பொருளுரை: 

தினமும் சுழற்சியாய் பயணம் செய்து கொண்டிருக்கும் சூரியனே! 

நீ பகற்பொழுதை உனதாக்கிக் கொள்கிறாய்! நிலவு வருவதைக் கண்டு புறமுதுகிட்டு ஓடுகிறாய்! நிதமும் வருவதும் போவதுமாய் ஒவ்வொரு ராசிக்கேற்ப மாறி வருகிறாய்! 
மலைமுகட்டில் மறைந்து ஒளிகின்றாய்! அகன்ற பெரிய ஆகாயத்தில் பகல் பொழுதில் மட்டும்தான் உன் கிரணங்களைப் பரப்பித் தோன்றுவாய்! 

அயல் நாட்டு மன்னர்களும், இந்நாட்டைக் காக்கும் அரசரை வழிபட்டு மாறுபடாமல் நடந்து கொள்ளவும்,
அதன் விளைவாக இன்ப நுகர்ச்சியை விரும்பியும், இப்பூமி பிற வேந்தர்க்கும் பொது என்னும் சொல்லுக்குப் பொறுக்காமல், தன் நாடு சிறிது என்ற எண்ணம் மேலும் பிற நாட்டின் மேல் கவனத்தைச் செலுத்த தணியாத உள்ளத்துடன், பொருளைக் குறைவில்லாது வளங்கும் வள்ளன்மையும் உடைய, எதிர்நின்று கொல்லும் படையையுடைய சேரலாதனுக்கு எவ்வாறு ஒப்பாவாய்? 

Description:

Oh Sun! The kings are praising Seralaadhan. He wants pleasant life. He wants to disprove that the world is common to all. 
He wants to extend his land with a strong will. He has a strong mind. He gives others without measures. He has an army which conquered enemies. 

How are you equal to Seralaadhan? You come only in the day time. You retrace to the moon and run away. Without stability, you appear again and again. You hide yourself behind the mountain. You appear in the sky spreading many rays only in the day time. -Kapilar


முலம்:
http://thamizhanna.blogspot.in/2010/05/purananooru-first-15-songs-english.html

No comments: