Sunday, January 31, 2016

புறநானூறு - 7. வளநாடும் வற்றிவிடும்!

புறநானூறு - 7. வளநாடும் வற்றிவிடும்!

பாடியவர் : கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன் : சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை : வஞ்சி. 
துறை: கொற்ற
வள்ளை: மழபுல வஞ்சியும் ஆம். 

களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்துஅடிக்,
கணை பொருது கவிவண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின்,
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!
தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.

பொருளுரை: 

யானையின் பிடரி மேலிருந்து அதனைச் செலுத்துகின்ற கால் பாதங்களையும், வீரக்கழல் அணிந்த முன் வைத்த காலைப் பின் வைக்காத திருத்தமான அடியும்,
அம்பொடு இணைத்து பிறர்க்கு வேண்டுவது வழங்குவதற்காக நிரம்ப அள்ளிக் கொடுக்கக் கவியும் கைகளில், 
கண்களில் ஒளி விளங்கும் அழகிய வில்லும், 
திருமகள் பிறர் மார்பை மறுத்து, இவன் மார்பில் குடியிருக்கும் படியான அழகிய பரந்த மார்பினையும், யானைக்கு நிகரான மிக்க வலிமையுமுடையவன். 


பகலென்றும் இரவென்றும் எண்ணாது பகைவரது ஊரைச் சுடுகின்ற தீயினது ஒளியில் கூவியழைத்தலும், 
அச்சம் நடுக்கமுடன் மக்கள் அழுகின்ற ஆரவாரத்தோடும் கூடிய கொள்ளையை விரும்புதலை உடையவன். 

ஆதலின் நல்ல பொருள்களை இல்லாதவாறு ஆக்கும் வண்ணம் இயக்கப்பட்ட தேரையுடைய வளவ! 

புது வருவாய் நிரம்பிய செழிப்புடன் திகழும் ஊர்களையுடைய மாற்றாரது அகன்ற பரப்புடைய நாடு குளிர்ந்த நீர் பாயும் ஓசையையுடைய பரந்த 
நீர் வளங்களை மண் அடைத்து மீனால் அடைக்கும் என்றும், 

‘நீயோ இரவும் பகலும் அந்நாட்டுப் பகையரசர்களைப் பொருதழிக்கக் கருதி, அவர்தம் ஊர்களைச் சுட்டெரித்தலால் 
அந்நாட்டு மக்கள் அழுது புலம்பும் ஆரவாரக் கொள்ளையை விரும்புகின்றாய்; 
அதனால் அந்நாடுகள் நலமிழந்து கெட்டன காண்’ என்றும் கரிகாலனிடம் கருங்குழலாதனார் எடுத்துக் கூறுவது 
இவரது சான்றாண்மையைப் புலப்படுத்துகிறது. 

இப்பாட்டின் மூலம், இவர் கரிகாலனின் வீரத்தைப் பாடும் பொழுது, அவனது போரின் கடுமையால் பகைவர் நாடு அழிவுறுதலை எடுத்துச் சொல்லி
 அவன் மனதில் அருள் பிறப்பிப்பது முக்கியமானது. 

இப்பாடல் வஞ்சித் திணையாகும். மண்ணாசை காரணமாக வீரர்கள் வஞ்சிப்பூவை சூடிப் பகைவர் நாட்டுடன் போரிடுவது வஞ்சித் திணையாகும். 

துறை: இது, பிறர் அகன்றலை நாடு நல்ல இல்ல ஆகுப என்று அமைதலால் கொற்றவள்ளை துறையென்றும், 
ஊர் சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலை என்றதால் மழபுல வஞ்சித்துறை என்றும் ஆயிற்று.  

Description:

Oh King! You have feet which drive the elephants' legs which have worn anklets, 
convex hands because of sending arrows repeatedly, beautiful bow which attracts the eyes, 
the broad chest which is liked by Thirumahal, 
who neglected the chest of other kings and the strength of fighting elephants. 

You are burning the countries not considering night and day. 
Though you hear crying voices in the fire which is burning village you want to wage wars.
 So, there are no good things in those countries. 

Oh king of the fertile land! The countries you destroyed are fertile where they shut down the cold water
which comes breaking the bank with fish, instead of shutting down with sand. -Karunkuzal Aadhanaar

முலம்:
http://eluthu.com/kavithai/122161.html
http://thamizhanna.blogspot.in/2010/05/purananooru-first-15-songs-english.html


No comments: