?ஃப்ளாட் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களை பில்டர் மற்றும் அரசு தரப்பிடமிருந்து வாங்க வேண்டும்?
மரியம் பிரிட்டோ. சென்னை,
மணி சங்கர், தலைவர்,
ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃப்ளாட் அண்ட்
ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன்.
‘‘பட்டா (மனைகளுக்கு) மற்றும் வில்லங்கச் சான்றிதழ் ஆகிய இரண்டை மட்டும் நீங்கள் அரசிடமிருந்து வாங்க வேண்டும். பிரிக்கப்படாத நிலங்களின் கிரயப் பத்திரம் (Undivided share of land of sale deed), கட்டுமான ஒப்பந்தம், தாய் பத்திரம், சொத்தின் லீகல் ஒப்பீனியன் சான்றிதழ், மொத்த அபார்ட்மென்ட் அல்லது அனுமதி பெற்ற வீட்டின் மொத்த வரைபடம், திட்ட அனுமதி மற்றும் வரைபட அனுமதி, சென்னையில் என்றால் சிஎம்டிஏ, மற்ற மாவட்டங்கள் என்றால் டிடிசிபி போன்ற அமைப்புகளிடம் கட்டடம் கட்டி முடித்தபின் நிறைவுச் சான்றிதழ், மின்சார அட்டை, மின்சார மீட்டருக்கு மின்சார வாரியத்தில் டெபாசிட் செய்த ரசீது, கழிவுநீர் போக்குவரத்துத் திட்டம், அபார்ட்மென்டுகளில் லிஃப்ட்களைப் பயன்படுத்த தமிழக அரசிடமிருந்து பெற்ற சான்றிதழ், பார்க்கிங் பகுதியை உறுதிபடுத்திக் கொள்ள பார்க்கிங் பகுதியின் வரைபடம் (தெளிவாக எல்லைகள் குறிபிடப்பட்டதாக, யாருக்கு எந்த இடம் என்று ஒதுக்கப்பட்ட வரைபடம் இருப்பது அவசியம்), தண்ணீர் சுத்திகரிப்பான், லிஃப்ட் ஆகியவைகளின் வாரன்டி கார்டு, தரைத் தளம் மற்றும் மூன்று தளங்கள் (G+3) கட்டப்பட்டிருந்தால் அதற்குப் பட்டயப் பொறியாளரிடம் பெற்ற சான்றிதழ், பூகம்ப அடித்தள விவரங்கள் அடங்கிய டாக்குமென்ட்டுகள், தண்ணீர்த் தொட்டி மற்றும் சம்ப் ஒருங்கிணைந்துள்ளதா அல்லது பிளாக்குக்கு பிளாக் என்று தனியாக உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்வதற்காக பிளம்பிங் திட்ட நகல் ஆகியவற்றைப் பில்டரிடமிருந்து பெற வேண்டும். அபார்ட்மென்டில் செக்யூரிட்டி சர்வீசஸ் இருந்தால் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரிகள், பில்டர் கட்டுமானப் பணிக்கு வாங்கிய வங்கிக் கடனை அடைத்துவிட்டதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்களை பில்டரிடமிருந்து வாங்க வேண்டும்.”
முலம்: விகடன்
No comments:
Post a Comment