Monday, December 15, 2014

விகடன்: கீரைகளின் மகத்துவம்


http://news.vikatan.com/article.php?module=news&aid=36155&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

அரைக்கீரை

உடல் தளர்ச்சியைப் போக்கி ஊக்கமூட்டும், மலச்சிக்கலைப் போக்கும். குடலின் பலத்தை அதிகரிக்கும், உடல் பித்தத்தைக் குறைக்கும். இதில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளது. சரும நோய்களைப் போக்கும். உடலில் இருக்கும் விஷதன்மையை முறிக்கும்.

நீர்முள்ளி

சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்களுக்குச் சிறந்த மருந்தாகும். மாதவிலக்கு பிரச்னையைச் சீர் செய்யும். தாது விருத்திக்கு நல்லது. அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

காசினி கீரை

சர்க்கரை நோயாளிகளுக்கான வரப்பிரசாதம். இதைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் ஊசி போட வேண்டிய அவசியம் இருக்காது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், அதிக உதிரபோக்கு போன்றவற்றுக்கு நல்ல மருந்து.


பசலைக் கீரை

இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் இதில் அதிகம். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு தொடர்பான நோய்களை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதைக் கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்தக் கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைபாட்டைத் தடுக்கிறது. மலச்சிக்கலுக்கு எதிரி. நீர் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

கரிசலாங்கண்ணி

சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் இந்த நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்து. புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் வல்லமை பெற்றது. கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.

வல்லாரை

நினைவாற்றலை பெருக்கும். மாலைக்கண் நோய் குணமாகும். தொழுநோய் மற்றும் பால்வினை நோய்ப் புண்களை ஆற்ற சூரணமாகச் சாப்பிடலாம். கட்டுப்போடவும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. முதுமையைத் தடுக்கும். சருமத்தில் ஏற்படும் நோய்களையும் வல்லாரை குணமாக்குகிறது.

மூட்டுவலியை விரட்டும் முடக்கத்தான்;
'முடக்கத்தான்’ என அழைக்கப்படும் அதி அற்புதமான மூலிகை தான் அது. 'முடக்கு வலியை அற்றான்’ என்கிற அர்த்தத்தில் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. 

கீரை சமையல் குறிப்புகள்:
கீரையை மாவில் போட்டு அரைத்து அடையோ, தோசையோ செய்து சாப்பிட்டால் கொஞ்சம் மருந்து வாசனை அடிக்கும். அதைப் போக்க, கீரையை மிக்ஸியில் அடித்து, மாவில் கலந்து தோசையோ... அடையோ செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். கீரையை ஆய்ந்து, எண்ணெயில் வதக்கி, உப்பும், காய்ந்த மிளகாயும் சேர்த்து அரைத்து துவையலாகப் பயன்படுத்தலாம். பொடியாக நறுக்கி, மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம். கீரையைப் பொடியாக நறுக்கி வேகவைத்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்துடன் சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி பொரியல் செய்து சாப்பிடலாம். பருப்புகளுடன் சேர்த்துக் கூட்டு செய்யலாம். இப்படி பலவிதமாக சமைத்துப்  பயன்படுத்தலாம்.

No comments: