Friday, October 24, 2014

தேர் பற்றிய நிறைய தகவல்கள்


திருவாரூரில் தேர் திருவிழா என்பது ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் நடைபெறும். தேர் திருவிழாவின் நோக்கம் என்பது என்ன தெரியுமா ? கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட இயலாத முதியவர்கள், நோயாளிகள் ஆகியோருக்காக இறைவனே கோயில் விமானம் போன்ற அமைப்புடைய தேரில் ஒளி ஏற்றி அவர்களின் இல்லம் தோறும் சென்று அருள் வழங்கும் முகமாகத் தேர்த் திருவிழாக்களைச் சான்றோர்கள் ஏற்படுத்தினர். பெரும்பாலும் அனைத்து ஊர்களிலும் உள்ள கோயில்களில் வருடத்தில் ஒரு முறையாவது பிரம்மோத்சவ விழா (பத்துநாள்) சிறப்பாக நடைபெறும். விழாவின் போது எட்டாவது நாள் அன்று இறைவன் தேரில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் தில்லையில் (சிதம்பரம்) மட்டும் நடராசப் பெருமாள் இரண்டு முறை திருவீதியுலா (ஆனி, மார்கழி) வருகிறார். திருத்தேரின் வடம் பிடித்துத் தேரினை இழுப்பதால் கயிலையிலும், வைகுந்தத்திலும் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.



No comments: