Wednesday, July 27, 2016

புறநானூறு - 137. நின்பெற்றோரும் வாழ்க!

புறநானூறு - 137. நின்பெற்றோரும் வாழ்க!

பாடியவர்: ஒருசிறைப் பெரியனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி; பரிசில் துறையும் ஆம்.

இரங்கு முரசின் இனம்சால் யானை
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர்யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அறியு மோனே; துவன்றிய

கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
கழைக்கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
கண்ணன்ன மலர்பூக்குந்து
கருங்கால் வேங்கை மலரின் நாளும்

பொன்னன்ன வீசுமந்து
மணியன்னநீர் கடற்படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் அருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர்நின் தந்தை

தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!


பொருளுரை:


ஒலிக்கும் முரசும், நிறைந்த யானைக் கூட்டமும், 
கடலை எல்லையாகவும் கொண்டு வெற்றியுடன் பொருந்திய மூவேந்தரைப் பாடுவதில் 
நான் ஒருவனே அவா இல்லாதவனாக இருக்கிறேன். 

முன்னரே இருந்து உன்னையே நான் அறிவேன். 
நீர் நிறைந்த பள்ளத்தில் விதைத்த வித்து வறட்சியால் சாவது இல்லை. 
அது கரும்பைப் போல் தழைக்கும். 
கோடைக் காலத்தில் வெயில் காய்ந்தாலும், 
மேகம் முகந்த நீர் மழையாகப் பெய்வதால் மகளிரின் கண்கள் போன்ற மலர்கள் பூக்கும். 

கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் பொன்போன்ற மலர்களின் மகரந்தத் தூள்களைச் 
சுமந்து நீலமணி போன்ற நீர் கடலுக்குச் செல்லும். செம்மையான மலைப் பக்கங்களையுடைய நாஞ்சில் நாட்டு அரசே! 

சிறிய வெண்ணிற அருவிகளும் பெரிய மலைகளும் உள்ள நாட்டை உடையவனே! 
நீ வாழ்க! உன்னைப் பெற்ற உன் தந்தையும் தாயும் வாழ்க!


Description:(A Song About Naanjil Valluvan)

I am the one who have not the desire to praise the three kings 
who have young elephants and the world  which has the sea as the boundary. 

I am the one who know you very earlier. 
The seed which is sowed in a pit which is full of water 
will not go waste without growing because of the scarcity of water. 
It will grow like the sugarcane. 
Though the rain fails in the summer, the water in the ponds never goes dry. 
The river water  which looks like clear gems will carry vengai flowers and run towards the sea. 
Oh lord of this fertile Naanjil hill ! 
You live long. Let your father and mother also live long. 
-Orusirai Periyanaar


முலம்:
http://puram400.blogspot.ie/2010/01/137.html
http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html

No comments: